நவ.,16 வரை நீலகிரிக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பு

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (2)
Advertisement
நீலகிரி: நவ.,16 வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பை மாநில பேரிடர் மேலாண்மைத்துறை விடுத்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,13) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
Nilgiris, Landslide, Warning, Tamilnadu, நீலகிரி, நிலச்சரிவு, எச்சரிக்கை, பேரிடர் மேலாண்மைத்துறை

நீலகிரி: நவ.,16 வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பை மாநில பேரிடர் மேலாண்மைத்துறை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,13) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நவ.,12ம் தேதி நிலவரப்படி இயல்பைவிட 95 முதல் 100 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், நவ.,16ம் தேதி வரை பொதுமக்கள் நீலகிரிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தரப்பில் கூறுகையில், 'நவ.,12 முதல் 16ம் தேதி வரையிலான 5 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்; நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்,' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
12-நவ-202122:43:55 IST Report Abuse
Mohan நவம்பர் 16 முதல் நிலம் சரியாதா இல்லை பிளாட் போட்டு வித்து வித்து விளையாடுவீங்களா.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
12-நவ-202119:08:35 IST Report Abuse
Ramesh Sargam இந்த மழை காலம் முடியும் வரை வீட்டை வீடு அனாவசியமாக எங்கேயும் போகாதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X