பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை ( 12.11.2021 - 18.11.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம்சந்திரன், புதன். சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நலம் அளிக்கும்அசுவினி: திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணி/ தொழிலில் சிறப்படைவீர்கள். பணப்புழக்கம் நன்றாக
வாரபலன், ராசிபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 12.11.2021 - 18.11.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்



சந்திரன், புதன். சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணி/ தொழிலில் சிறப்படைவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

பரணி: மணமகனாக / மணமகளாகும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிறைய உழைத்தால் மட்டுமே நிறைய லாபம் வரும். சிக்கனத்தை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

கார்த்திகை 1ம் பாதம்: வருமானம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். திருமணம் கைகூடும். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தை வாரி இறைப்பீர்கள்.


ரிஷபம்




latest tamil news




புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. மகாலட்சுமி வழிபாடு வளம் தரும்.

கார்த்திகை 2,3,4: கடந்த கால சிரமங்கள் மறையும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். புதிய வகையில் வருமானம் வரும். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சு நடக்கும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

ரோகிணி: துணிச்சலான செயல்களில் ஈடுபடுவீர்கள். இத்தனை காலமாக மனதில் இருந்த உறுத்தல் நீங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மிருகசீரிடம் 1,2: தடைபட்ட விஷயங்கள் எளிதாக நடந்தேறும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் லாபம் கிடைக்கும்.


மிதுனம்



ராகு, கேது, சுக்கிரன். புதன் நன்மைகளை வழங்குவர். முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிருகசீரிடம் 3,4: திடீர் ஆதாயம், எதிர்பாராத பணவரவு கிடைக்கும். மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்வீர்கள். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நற்பெயர் கிடைக்கும்.

திருவாதிரை: வேலை விஷயத்தில் எடுத்த முயற்சி ஜெயிக்கும். உங்களுடைய பல கனவுகள் நிறைவேறுவதற்கு இது சரியான சமயம். .கடன் பிரச்னை தீர்ந்து செல்வச்செழிப்பு அடைவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: யோகமான வாரமாக அமையும். விரும்பிய வேலைக்கு மாறுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

சந்திராஷ்டமம்: 10.11.2021 அதிகாலை 4:40 மணி - 12.11.2021 காலை 8:33 மணி
.


கடகம்



குரு, புதன் அனுகூல பலனை தருவர். சிவன் வழிபாடு சிரமம் நீக்கும்.

புனர்பூசம் 4: சுபவிஷயம் நிகழ்த்துவதற்கான சூழ்நிலை அமையும். குழப்பம் நீங்கி எடுத்த செயல்களை இனிதே செய்து முடிப்பீர்கள். அழகு சாதனங்களும் அலங்காரப் பொருட்களும் நிறைய வாங்குவீர்கள்.

பூசம்: ஆரோக்கியம் பயமுறுத்தினாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். உழைப்பால் வாழ்வில் உயர்வு நிலையை எட்டுவீர்கள். திட்டமிட்ட எல்லாமே சற்று நிதானமாகவே நிறைவேறும்.

ஆயில்யம்: பொருளாதார பிரச்னை விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சுபநிகழ்ச்சி நடைபெறும். பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, வேலையில் இடமாற்றம் கிடைக்கும். பயணங்களில் நன்மை கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 12.11.2021 காலை 8:34 மணி - 14.11.2021 பகல்2:27 மணி
.


சிம்மம்




latest tamil news




செவ்வாய், புதன், சனி அதிர்ஷ்ட பலன்களை தருவர். சூரியன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: அதிர்ஷ்டமும், பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை இருந்த பணக்கஷ்டம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். தடைகள் தவிடு பொடியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பூரம்: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு தாமதமாக முடிவு கிடைக்கும். வீடு அல்லது அலுவலக இடமாற்றம் ஏற்படும்.

உத்திரம்1: கற்பனையான கவலைகளால் வருத்தம் ஏற்படும். யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பார்க்க வேண்டாம். தொழில், வியாபாரம் ஏற்ற இறக்கமின்றிச் சீராகவே நடைபெறும்.

சந்திராஷ்டமம்: 14.11.2021 பகல் 2:28 மணி - 16.11.2021 இரவு10:48 மணி.
.


கன்னி



சந்திரன் புதன். கேது அனுகூல அமர்வில் உள்ளனர். குருவாயூரப்பன் வழிபாடு வளம் தரும்.

உத்திரம்2,3,4: நல்ல காரணங்களுக்காக செலவுகள் ஏற்படலாம் உங்களுடைய கவர்ச்சி அம்சம் மேலோங்கும். நீங்கள் சொல்வதைக் கேட்க பலர் தயாராக இருப்பார்கள்.

அஸ்தம்: உங்களுடைய சிரமங்கள் நீங்கும். பொருளாதாரத்தில் உயர்வு அடைவீர்கள். எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும். மகிழ்ச்சியாக ஊர் சுற்றத் தோன்றும். எனினும் கடமை உணர்ச்சியைக் கைவிட வேண்டாம். ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

சித்திரை 1,2: அலங்காரப் பொருட்களும், அழகு சாதனங்களும், வாசனை திரவியங்களும் வாங்கவும் அதிகம் பயன்படுத்தவும் தோன்றும். திருமணமானவர்களின் பொறுப்பு அதிகரிக்கும்படியான சம்பவங்கள் நிகழும்.

சந்திராஷ்டமம்: 16.11.2021 இரவு 10:49 மணி - 19.11.2021 காலை9:16 மணி.


துலாம்



குரு, புதன், சந்திரன் கூடுதல் நன்மைகளை வாரி வழங்குவர். விநாயகர் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.

சித்திரை 3,4: செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை, குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரால் நன்மை ஒன்று ஏற்படும்.

சுவாதி: குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறும் குழந்தை இருப்பவர்களுக்கு மகன்/ மகளால் மகிழ்ச்சியும் கிடைக்கும். கல்வி, எழுத்து/ புத்தகம் சார்ந்த துறைகளில் லாபம் மெல்ல கூடும்

விசாகம் 1,2,3: சகோதர சகோதரிகளுக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு மகிழ்வர். பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள்.


விருச்சிகம்



சூரியன், சந்திரன், சுக்கிரன் நல்ல பலனைத் தருவர். பைரவர் வழிபாடு வளம் தரும்.

விசாகம் 4: உணவு விஷயத்தில் அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் ஜீரணப் பிரச்னை ஏற்படும். அனுகூலமான வாரம். உங்களின் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

அனுஷம்: எந்த செயல் செய்தாலும் அதில் பொறுமை அவசியம். இந்தவாரம் ஒரு சுமுகமான வாரமாக அமையும். ஆர்வமாக எதிர்பார்த்த சுபவிஷயம் வந்து சேரும்.

கேட்டை: வழக்கத்தை விடவும் அதிக வேகமாகச் செயல்பட்டு நினைத்த இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமாக அனைவரும் கூடி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும்.


தனுசு



சூரியன், செவ்வாய். புதன், கேது தாராள நற்பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு நிம்மதி தரும்.

மூலம்: பிறர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். பிரச்னைகள் ஏற்படலாம். உடல்நலன் சீரடையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் தாய்வழி உறவினர்களால் தேவையான நேரத்தில் ஆதரவு வரும்.

பூராடம்: சகோதரர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். நல்லவர்களின் உதவிகளும் அவற்றால் நன்மைகளும் வந்து சேரும்.

உத்திராடம்1: பேச்சில் நிதானம் தேவை. பரபரப்புடன் இயங்கி நல்ல செயல் ஒன்றை முடிப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டில் தடை ஏற்பட்டு அதன் பிறகு நிறைவேறும்.


மகரம்



சுக்கிரன், கேது, புதனால் நன்மை கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். பேச்சில் கவனம் தேவை, இல்லையென்றால் அவப்பெயர் வந்து சேரும்.

திருவோணம்: உழைப்பு, முயற்சியின் காரணமாக பபணவரவு கூடும். செய்யும் தொழில் மேன்மை அடையும். வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.

அவிட்டம்1,2: எதிர்பாலின நட்புகளால் நன்மை கிடைக்கும். உங்களை மற்றவர் புரிந்து கொள்ளாத நிலையில் பொறுமையாக உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்வது நல்லது.
.


கும்பம்



புதன், சுக்கிரன், செவ்வாய் அபரிமித நன்மை அளிப்பர். சனீஸ்வரர் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: பெரியளவில் புகழும் பாராட்டும் கிடைக்கும். இனிய அனுபவம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட சமாளிப்பர்.

சதயம்: சிலருக்கு வேலையில் இடமாற்றம் வருவதற்கான வாய்ப்புண்டு. பணியில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: தொழில் செய்பவர்கள் பிரச்னைகளைச் சந்தித்தாலும் ஆதாயம் அடைவர். தந்தைவழி உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பேச்சில் வசீகரம் கூடும்.


மீனம்



குரு, சந்திரன், சனி அதிர்ஷ்ட பலன்கள் வழங்குவர். சூரியன் வழிபாட்டால் துன்பம் தீரும்.

பூரட்டாதி 4: நீங்கள் பெரிய அளவில் உயர்வடையப் போகிறீர்கள். வேலை, தொழிலில் சிறப்பு கூடும். சொத்து பிரச்னை தீரும். சுபவிஷயங்கள் இழுபறியுடன் நடந்து முடியும்.

உத்திரட்டாதி: தாராளமான நிதிநிலை இருக்கும். தடைகள் நீங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடி வரும். பண விஷயத்தில் ஏமாற வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. உடல்நிலையிலும் சற்று கவனம் கூடுதலாகும். எதிர்பாலினத்தைக் கவருவீர்கள்.

ரேவதி: சொந்த வீடு, வாகனம் அமைய வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X