சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 கோவில்களில் பூட்டு உடைத்து உண்டியல் காணிக்கை பணம் திருட்டு

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அருகில், அடுத்தடுத்து முருகர், பெருமாள், விநாயகர் கோவில்கள் உள்ளன. நேற்று இரவு 6:00 மணிக்கு கோவில்களை மூடிவிட்டு அர்ச்சர்கள் வீட்டுக்கு சென்றனர். இன்று காலை 8:00 மணிக்கு,

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அருகில், அடுத்தடுத்து முருகர், பெருமாள், விநாயகர் கோவில்கள் உள்ளன. நேற்று இரவு 6:00 மணிக்கு கோவில்களை மூடிவிட்டு அர்ச்சர்கள் வீட்டுக்கு சென்றனர். இன்று காலை 8:00 மணிக்கு, அர்ச்சகர்கள் வந்த போது, மூன்று கோவில்களிலும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில், முருகர், விநாயகர் கோவில்களில் தலா ஒரு உண்டியல், பெருமாள் கோவிலில் இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போனதும், திருடுவதற்கு வசதியாக கோவிலில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவின் ஒயர் துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதில் பெருமாள் கோவிலில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவதால் அதிக பணம் இருக்கலாம் என தெரியவந்தது. மூன்று கோவில்களின் மேலாளர் ரகு கொடுத்த புகார்படி குரிசிலாப்பட்டு போலீசார் திருட்டு குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X