வருந்துகிறோம் ஆனால் மறுதேர்வு நடத்த முடியாது: நீட் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்!

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: நீட் தேர்வில் கேள்வி - பதில் தாள் மாற்றித் தரப்பட்டதால் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மறுதேர்வு நடத்தும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.இந்தாண்டு செப்., 12-ல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
Court,NEET exam,Supreme Court,medical entrance test,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீட்,நீதிமன்றம்

புதுடில்லி: நீட் தேர்வில் கேள்வி - பதில் தாள் மாற்றித் தரப்பட்டதால் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மறுதேர்வு நடத்தும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தாண்டு செப்., 12-ல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஐதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 710 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் நீட் கேள்வி - பதில் மாற்றி வழங்கப்பட்டதாக இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சிறப்பு நீட் தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அக்., 28 அன்று இவ்வுத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


latest tamil news




இந்நிலையில் இன்று (நவ.,12) மீண்டும் அம்மனு விசாரணைக்கு வந்தது. “16 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு தவறுக்காக மறு தேர்வை நாடுவார்கள். அப்படி மறுதேர்வு வைப்பது சாத்தியமில்லை” என மத்திய அரசு கூறியது.

அதனை ஏற்ற நீதிபதி எல்.என்.ராவ், “மாணவர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம், அவர்கள் மீது அனுதாபம் கொள்கிறோம், ஆனால் மறுதேர்வு நடத்த முடியாது.” என கூறி மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
13-நவ-202114:21:22 IST Report Abuse
vinu இதை கரணம் ஒரு சினிமா நடிகனின் மகனுக்கோ அல்லது ஒரு மந்திரியின் மகனுக்கோ அல்லது ஒரு பெரிய தொழிலதிபரின் மகனுக்கு ஏற்பட்டால் உடனை அவர்களுக்கு மாரு தேர்வு நடத்த உத்தரவு இட்டுருப்பார்கள். இந்தியாவில் என்று எல்லாருக்கும் ஒரே மாதிரி நியாயம் கிடைக்கும் என்று தெரிய வில்லை ?
Rate this:
Cancel
Rajagopal Mohankumar - Pudukkottai,பஹ்ரைன்
13-நவ-202113:59:54 IST Report Abuse
Rajagopal Mohankumar வினா தாளில் தவறு ஏதும் இல்லாமல், வினா தாள் மாறிமட்டும் இருந்திருந்தால் மறு தேர்வு தேவையில் இல்லை. ஆகவே இது சரியான தீர்ப்புதான் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
13-நவ-202113:37:16 IST Report Abuse
Davamani Arumuga Gounder தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 710 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X