'எச் 4' விசாவை உடனடியாக வழங்க அதிபர் ஜோ பைடன் அரசு முடிவு

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 'எச் 1 பி விசா' பெற்று செல்வோரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 'எச் 4' விசாவை உடனடியாக வழங்க, பைடன் அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது.
 
'எச் 4' விசா,வழங்க  அதிபர், ஜோ பைடன், அரசு, முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 'எச் 1 பி விசா' பெற்று செல்வோரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 'எச் 4' விசாவை உடனடியாக வழங்க, பைடன் அரசு முடிவு செய்துள்ளது.


அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது. இந்த எச் 4 விசா பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள், அங்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.


latest tamil news



அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், எச் 1 பி விசா மற்றும் எச் 4 விசாக்கள் வழங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எச் 4 விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்றார். முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்திய பல்வேறு தடைகளை ரத்து செய்ததுடன், எச் 4 விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து எச் 1 பி விசாவில் அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச்4 விசாவை உடனடியாக வழங்க பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
13-நவ-202108:52:33 IST Report Abuse
Vijayalakshmanan S பி 1/ பி 2 விசிட்டர் விசா மனு அனுப்பி பல மாதங்கள் கடந்தும் அமெரிக்கா அரசு கட்டணத்தை பெற்று கொண்ட பின்னும் மனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியர்கள் பயணம் செய்ய முடியவில்லை. பி1/ பி 2 விசாவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Rajan - chennai,இந்தியா
13-நவ-202106:26:09 IST Report Abuse
Rajan நெறய அடிமைகள் தேவைப்படுகிறார்கள்..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-நவ-202123:49:49 IST Report Abuse
Bhaskaran Appadiye paththaandugal amerikaavil irunthaal green card valangi atharku erpaaduseiyalaam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X