சென்னையில் வானம் வெளுத்தது

Added : நவ 12, 2021
Share
Advertisement
கடந்த ஆறாம் தேதி பார்த்த சூரியனை ஆறு நாட்களுக்கு பிறகு இன்றுதான் சென்னை மக்கள் மீண்டும் பார்த்தனர்.எப்போதும் வெயிலை சபிக்கும் சென்னை மக்கள், எப்போதடா வெயில் அடிக்கும் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டனர்,மேல்சட்டை கூட இல்லாமல் லுங்கி மட்டும் அணிந்து துாங்கும் ஆண்களில் பலர் 23 டிகிரிக்கு வந்துவிட்ட குளிர் காரணமாக பீரோக்களில் துாங்கிக் கிடந்த கம்பளிகளை தேடி எடுத்து
chennai


கடந்த ஆறாம் தேதி பார்த்த சூரியனை ஆறு நாட்களுக்கு பிறகு இன்றுதான் சென்னை மக்கள் மீண்டும் பார்த்தனர்.
எப்போதும் வெயிலை சபிக்கும் சென்னை மக்கள், எப்போதடா வெயில் அடிக்கும் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டனர்,
மேல்சட்டை கூட இல்லாமல் லுங்கி மட்டும் அணிந்து துாங்கும் ஆண்களில் பலர் 23 டிகிரிக்கு வந்துவிட்ட குளிர் காரணமாக பீரோக்களில் துாங்கிக் கிடந்த கம்பளிகளை தேடி எடுத்து போர்த்திக் கொண்டனர்.
வீடெங்கும் காயாமல் தேங்கிக் கிடக்கும் ஈரத்துணிகள் முதல் மழை நீர் நிறைந்துள்ள தெருக்கள் வரை அனைத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை.
மெரினா கடற்கரை மணலில் நீர் நிறைந்திருப்பதால் போலீசார் அனுமதி தரவில்லை இதனால் பக்கத்தில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு மக்கள் திரண்டனர், உச்சி வெயில் இதமாக இருந்ததால் பட்டப்பகலில் மணலில் உட்கார்ந்து அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்
மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்கள் தேங்கிக் கிடந்த தண்ணீரில் படகுகள் விட்டும்,தெர்மகோல் போன்ற மிதவைகள் மீது மிதந்தும் விளயைாடி மகிழ்ந்தனர்.
கடற்கரையில் புறாக்களுக்கு உணவிடும் பழக்கம் சிலருக்கு உண்டு ஆனால் அதற்கு வழியில்லாத அளவிற்கு நீர் நிறைந்திருப்பதால் உணவிடமுடியவில்லை இது தெரியாமல் புறாக்கள் இரை தேடி பறந்து கொண்டிருந்தன.
இந்த தொடர் மழைக்கு நடுவிலும் கமல்ஹாசன் பிறந்த நாள் போஸ்டர்கள் நகர்முழுவதும் ஒட்டப்பட்டு வருங்கால முதல்வரே என்று வாழ்த்திக்கொண்டிருந்தது.
ஆறாவது நாளிலும் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டார், வேட்டிக்கு விடை கொடுத்துவிட்டு பேண்ட்டிற்கு மாறிவிட்டார், நிவாரண முகாம்களில் தரப்படும் உணவின் தரத்தை சரிபார்த்தார்,வெள்ளத்தில் சிங்கப் பெண் போல செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை உடனடியாக கூப்பிட்டு பாராட்டு பத்திரம் வழங்கினார்.
நான் யார் தெரியுமா?என்று அவ்வப்போது மார்தட்டும் போதெல்லாம் இயற்கை நான் யார் தெரியுமா? என்று காட்டி வருகிறது இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே காட்டு காட்டியுள்ளது.
-எல்.முருகராஜ்


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X