செய்திகள் சில வரிகளில்...| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 12, 2021
Share
அதிகரிக்கும் ஆபத்தான பயணங்கள்பொள்ளாச்சியில், கட்டுமான பணிகள், தென்னை சார்ந்த பணிகள் என அனைத்துக்குமே பணியாளர்களை பாதுகாப்பின்றி லாரி, டெம்போ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்வது அன்றாட நிகழ்வாகி விட்டது.திறந்த வாகனத்தில், எவ்வித பாதுகாப்புமின்றி தொழிலாளர்கள் பயணிப்பது, அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாதது என்பது குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு

அதிகரிக்கும் ஆபத்தான பயணங்கள்பொள்ளாச்சியில், கட்டுமான பணிகள், தென்னை சார்ந்த பணிகள் என அனைத்துக்குமே பணியாளர்களை பாதுகாப்பின்றி லாரி, டெம்போ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்வது அன்றாட நிகழ்வாகி விட்டது.திறந்த வாகனத்தில், எவ்வித பாதுகாப்புமின்றி தொழிலாளர்கள் பயணிப்பது, அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாதது என்பது குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.இது போல, தங்கள் சுயலாபத்துக்காக, தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து அழைத்துச் செல்லும் வியாபாரிகள், தொழில் நிறுனங்கள் மீது, சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதால், விதிமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவுபொள்ளாச்சி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பொள்ளாச்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டமும், ஆண்டு விழாவும் நடத்த முடியாமல் போனது.தற்போது, பணிகளை மீண்டும் துவக்கும் வகையில், சங்கத்தின் மாதாந்திர கூட்டம், டிச., மாதம் முதல் திங்கட்கிழமை மாலை, 4:00 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்குட்டு வீதியில் உள்ள பிராமண சமூக கூடத்தில் நடைபெறும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.சிறப்பு முகாம் புறக்கணிக்க முடிவுபொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை புறக்கணிக்கின்றனர்.தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், சட்டசபை தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும்; தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்க உள்ளனர்.சங்கத்தினர் கூறுகையில், 'கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (இன்று), நாளை மறுநாள் (நாளை) மற்றும் 27, 28 தேதிகளில் நடக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்கிறோம்.எங்களது கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சியில் மட்டும், 35க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்,' என்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய, உள்ளடங்கிய கல்வியின் கீழ் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கும் வழங்கும் விழா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.இவ்விழாவில், மூளை மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு மூளை முடக்கு வாத நாற்காலி, சக்கர நாற்காலி, ரோலேட்டர் வாக்கர், காது கேளாதோருக்கான காதொலி கருவி, மனவளர்ச்சி குறைபாடு உடைய மாணவர்களுக்கான விளையாட்டு உபகரண பெட்டி வழங்கப்பட்டன.தெற்கு ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) காயத்திரி, பகல் நேர பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, தலைமையாசிரியர் ஈஸ்வரி ஆகியோர், 65 மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினர். மாற்றுத்திறனுடைய மாணவர்களின் சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.உலக நீரிழிவு நோய் தினம்உடுமலை அரசு மருத்துவமனையில் நடந்த, நீரிழிவு நோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, டாக்டர் வனஜா, தலைமை வகித்தார். டாக்டர் மாரிமுத்து பங்கேற்று, நீரிழிவு நோயைக் கண்டறிதல், சிகிச்சை முறைகள், பாதிப்புகள் குறித்து நோயாளிகளிடம் விளக்கினார். அதேபோல், சித்தா டாக்டர் ராகவேந்திரசாமி, நோய் தடுப்பு மற்றும் உணவுப் பழக்கம் குறித்து எடுத்துரைத்தார்.அவ்வகையில், துரித உணவு மற்றும் கலாசாரம், பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை இளம் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த உடல் எடையை குறைக்க வேண்டும்.நீரிழிவு நோய் சிறுநீரகம் மற்றும் கண்களை பாதிக்கக் கூடியது. நீண்டகால சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு முக்கியமானதாகும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அதிகப்படியான நோயாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.பாட வகுப்புகள் துவக்க ஏற்பாடுஉடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், ஒன்று முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின், மாணவர்கள் பள்ளிக்கு வந்தததால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.நேர்மறை சிந்தனைகள், வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து, பள்ளிச்சூழலை இனிமையாக மாற்றினர். வாய்மொழிப்பயிற்சி, எழுத்துப்பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் வாயிலாக ஊக்குவிக்கப்பட்டனர்.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மாணவ, மாணவியரிடம் இனிமையான சூழல் ஏற்படும் வரை பாட வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளது.இதேநிலை தொடர்ந்தாலும், இனி வரும் நாட்களில் பாடங்களைக் கூர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால், பெரும்பாலான பள்ளிகளில் வரும், 15ம் தேதி முதல் பாட வகுப்புகள் நடத்தப்படும். மேலும், பருவத்தேர்வுக்கு தயார்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வாய்க்காலில் இறைச்சிக் கழிவுகள்உடுமலை நகரில் செயல்படும் பெரும்பாலான இறைச்சிக் கடைகளில், சுகாதார விதிகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. இறைச்சிக் கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொள்ளாச்சி ரோடு, ராஜவாய்க்காலில் கொட்டப்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:இறைச்சிக்கடைகளில் சேகரமாகும் எஞ்சிய கழிவுகள், திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. அதாவது, ரோட்டோரம் மற்றும் நீர்வழித்தடங்களில், நேரடியாக கொட்டப்படுவதால், சுகாதாரம் பாதிக்கிறது.அந்தந்த கடைகளிலேயே, இறைச்சிக் கழிவுகளை சேகரித்து வைக்கவும், நகராட்சி துாய்மைப் பணியாளர்களே நேரடியாகச் சென்று, கழிவுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன், 50 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது. இந்த வழித்தடத்தில், தினமும் பல நுாறு பயணிகள் சென்று திரும்புகின்றனர். இந்நிலையில், அனைத்து ரயில்களும் மடத்துக்குளம் ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தாலுகா தலைமையிடமாக மடத்துக்குளம் உள்ளது. இங்கு ரயில்கள் நிற்காத காரணத்தால், இவர்கள் அனைவரும் உடுமலை, பழநி உள்ளிட்ட ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து தான் ரயிலில் பயணிக்கும் நிலைமை உள்ளது. எனவே, மடத்துக்குளம் ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும். இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X