செய்தி செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு டிச., 15ம் தேதி கடைசி நாள்

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஆனைமலை: கோவை மாவட்டத்தில், ராபி பருவத்துக்கு பயிர்களுக்கு காப்பீட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட விவசாயிகளுக்காக, ராபி பருவத்துக்கு சோளம், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, கொண்டைக்கடலைக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும், நெல், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளுக்கு காப்பீடு அறிவிக்கப்படாமல் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தி

ஆனைமலை: கோவை மாவட்டத்தில், ராபி பருவத்துக்கு பயிர்களுக்கு காப்பீட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட விவசாயிகளுக்காக, ராபி பருவத்துக்கு சோளம், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, கொண்டைக்கடலைக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும், நெல், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளுக்கு காப்பீடு அறிவிக்கப்படாமல் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிக்கை:ஆண்டுதோறும் இரண்டு பருவங்களாக பயிர் காப்பீடு அறிவிக்கப்படுகிறது. நடப்பு ராபி பருவத்தில், கோவை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள பயிர்களுக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.சோளத்துக்கு, 142; மக்காச்சோளத்துக்கு, 450; நிலக்கடலைக்கு, 448; கரும்புக்கு, 2,875; கொண்டைக்கடலை, 256 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து, 'இ - சேவை' மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பிரீமியம் செலுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம்.டிச., 15ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள். விதைப்பு முதல் அறுவடை வரை ஏற்படும் வறட்சி, வெள்ளம், தொடர்மழை உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், அறுவடைக்குப்பின் தொடர் மழை, காற்று உள்ளிட்ட காரணங்களால் பயிர்கள் சேதமடையும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X