செய்தி செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
உடுமலை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, இன்றும், நாளையும் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.இந்திய தேர்தல் கமிஷன், 2022 ஜன.,1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது.அதன் அடிப்படையில், கடந்த, 1ம் தேதி, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி



உடுமலை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, இன்றும், நாளையும் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.இந்திய தேர்தல் கமிஷன், 2022 ஜன.,1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது.அதன் அடிப்படையில், கடந்த, 1ம் தேதி, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தாலுகா அலுவலகம், நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இன்று (13ம் தேதியும்,) நாளை (14ம் தேதி) மற்றும் 28, 28 ம் தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலுள்ள, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில், 2022 ஜன.,1ம் தேதி, 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம், 6, நீக்கலுக்கு, படிவம், 7, பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ள படிவம், 8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் 8 ஏ உள்ளிட்ட படிவங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்,' என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.மேலும், www.nvsp.in என்ற இணைய தளம் வழியாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X