நூலக புரவலரான புதுமண தம்பதி

Added : நவ 12, 2021
Advertisement
உடுமலை: உடுமலையில், மணக்கோலத்தில் நுாலகம் வந்த புதுமண தம்பதியர், புரவலராக சேர்ந்தனர்.பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் பேராசிரியாக பணிபுரிபவர் ஜெயசிங். இவருக்கும், ரோசி என்பவருக்கும், நேற்று உடுமலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, மணக்கோலத்தில், இருவரும், உழவர் சந்தை எதிரே உள்ள நுாலகம் எண் 2க்குச்சென்றனர். அப்போது, நுாலகத்திற்கு வந்திருந்த வாசகர்கள், புதுமண

உடுமலை: உடுமலையில், மணக்கோலத்தில் நுாலகம் வந்த புதுமண தம்பதியர், புரவலராக சேர்ந்தனர்.பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் பேராசிரியாக பணிபுரிபவர் ஜெயசிங். இவருக்கும், ரோசி என்பவருக்கும், நேற்று உடுமலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, மணக்கோலத்தில், இருவரும், உழவர் சந்தை எதிரே உள்ள நுாலகம் எண் 2க்குச்சென்றனர். அப்போது, நுாலகத்திற்கு வந்திருந்த வாசகர்கள், புதுமண தம்பதியரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.பின், அவர்கள், வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, நுாலகர் கணேசனிடம், ஆயிரம் ரூபாய் செலுத்தி, புரவலராக சேர்ந்தனர்.அவர்களை, நுாலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நுாலக வாசகர் வட்ட உறுப்பினர் வாழ்த்தினர். பின், நினைவுப்பரிசாக, திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X