நிலம் நீர் பயன்பாட்டில் தனியார் முதலீடு : மத்திய நிதியமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து வரும் 15 ம் தேதி மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு கொரோனா தொற்று கால கட்டத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை

புதுடில்லி: பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து வரும் 15 ம் தேதி மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.latest tamil newsஇது குறித்து மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு கொரோனா தொற்று கால கட்டத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


latest tamil newsஇந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது. புவிசார் அரசியல் முன்னேற்றங்களும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன. தனியார் துறையிடம் நேர்மறையான உணர்வு உள்ளது.


latest tamil newsஇதன் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் தனியார் துறையை ஈடுபடுத்துவது குறித்து மத்திய நிதிஅமைச்சர் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதியமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி வரும் 15 ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. என கூறினார்.


latest tamil news


மேலும் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் கூறுகையில் பொருளாதாரத்தில் குறிப்பாக நிலம் மற்றும் நீர் பயன்பாடுகளில் தனியார் துறையினர் பங் கேற்கும் வகையில் விதிமுறைளை தளர்த்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
13-நவ-202114:20:59 IST Report Abuse
PKN அரசு நிறுவனங்களில் 90% லாபம் ஈட்டுகின்றன. தனியார் மாதிரி 20-25% லாபம் வந்தால்தான் லாபமா? BSNLலுக்கு 4g கொடுக்காமல் நிறுத்தியதால்தான் நஷ்டம் ஏற்பட்டது. அவர்களுக்கு கொடுத்திருந்தால் மொபைல் கட்டணம் 3 மாதத்திற்கு 400 க்கு மேல் போயிருக்காது. இப்ப 600/-. ஆவினை மூடினால் தனியார் பால் விற்பனையாளர்கள் லிட்டர் 150 ருபாய் க்கு விற்பார்கள். இதனால் பால் உற்பத்தி பண்ணுபவர்களுககும் லாபம் வராது மக்களுக்கும் செலவு அதிகமாகும் தனியார் கார்பரேட்டுகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பர் இதுவே சிறந்த உதாரணம் தனியார் மயமானால் என்ன நடக்கும் என்பதற்கு.
Rate this:
Cancel
kannan - Chennai,இந்தியா
13-நவ-202113:33:56 IST Report Abuse
kannan ஆறுகள் ,ஏரிகளை பராமரிப்பது ,வருதுக்கால்வாய் ,போக்குக்கால்வாய் ஆகியவற்றை பராமரிப்பது போன்ற வேலைகளை தனியாரிடம் விட்டுவிடவேண்டும். அவர்கள் ஆறுகள் ,அணைகள் , ஏரியில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு விற்பது ,விவசத்திற்கு விற்பது ,மீன் வளர்த்து விற்பனைசெய்வது ,படகுகளும் மற்றும் பூங்காக்கள் அமைத்து அதில் நொழைவுக்கட்டணம் வசூலிப்பது போன்றவற்றை தனியாரிடம் கொடுத்துவிடவேண்டும் அப்போதுதான் நாடு சிறப்பாக இருக்கும் .
Rate this:
Cancel
13-நவ-202112:48:55 IST Report Abuse
ஆரூர் ரங் 2 ஜி யை BSNL க்கு மட்டுமே குடுக்காமல் அன்னிய லட்டர் பேடு கார்பரேட் பினாமிகளின் ஆட்களுக்கு லஞ்சத்துக்கு கொடுத்த🤔 திமுக இப்போ பொதுத்துறை பாதுகாப்பு பற்றிப் பேசுது. எல்லாம் கடைந்தெடுத்த 😡சந்தர்பவாதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X