சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளால் அபாயம்: ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கவுன்சிலர்கள் முன்வைத்து பேசினர்.ஆனைமலை ஒன்றியக்குழு கூட்டம் நேற்று, கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சாந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் கோபால் ரத்தினம் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அதிகாரிகள்



ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கவுன்சிலர்கள் முன்வைத்து பேசினர்.ஆனைமலை ஒன்றியக்குழு கூட்டம் நேற்று, கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சாந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் கோபால் ரத்தினம் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண் மற்றும தோட்டக்கலைத்துறை உள்பட, பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த முறை அதிக அளவிலான அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது:19 ஊராட்சிகளிலும், 400க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன; மழை காலத்தில் இந்த வீடுகளில் தங்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்; பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.கம்பாலபட்டி, அங்கலக்குறிச்சி, ஜல்லிபட்டி உள்பட பல ஊராட்சிகளில், குடிநீர் பிரச்னை நிலவுகிறது. பிரச்னையை சரிசெய்ய, அனைத்து ஊராட்சிகளிலும் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு போதிய அளவு கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும்.காளியப்பகவுண்டன்புதுார், குளத்துப்புதுார், சோமந்துறைசித்துார், கெங்கம்பாளையம் உள்பட, பல பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலங்களை, உயர்மட்ட பாலமாக கட்ட வேண்டும்.'மஸ்துார்' பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் முறையாக ஈடுபடுவது இல்லை. அரசு சிமெண்ட் பலருக்கும் கிடைப்பதில்லை. ஊராட்சிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதுடன், தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளன.இவ்வாறு, பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.ஒன்றிய அதிகாரிகள் பேசியதாவது:ஊராட்சிகளிலுள்ள சிதிலமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை இடித்து, புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மின்விளக்குகள் விரைவில் மாற்றப்படும். மக்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தவுடன், பல நிலைகளில் பரிசீலிக்கப்பட்டு, அரசு சிமெண்ட் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனால், தாமதம் ஏற்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி வாயிலாக, உயர்மட்ட பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு, கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X