சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அரங்கேறும் அடிதடி!

Added : நவ 12, 2021
Share
Advertisement
அரங்கேறும் அடிதடி!'உடனடியாக தலையிட்டு பிரச்னையை சரி செய்யவில்லை என்றால், பெரும் கலவரம் ஏற்படலாம்...' என, காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் அபாய சங்கு ஊதிஉள்ளனர், அந்த கட்சியின் சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும், முதல்வர் பதவி

 அக்கம் பக்கம்


அரங்கேறும் அடிதடி!



'உடனடியாக தலையிட்டு பிரச்னையை சரி செய்யவில்லை என்றால், பெரும் கலவரம் ஏற்படலாம்...' என, காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் அபாய சங்கு ஊதிஉள்ளனர், அந்த கட்சியின் சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும், முதல்வர் பதவி யாருக்கு என்பதில், பாகேலுக்கும், மூத்த தலைவரான சிங் தியோவுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது.

காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையிட்டதை அடுத்து, முதல் இரண்டரை ஆண்டுகள் பாகேலும், அடுத்த இரண்டரை ஆண்டுகள், சிங் தியோவும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.தற்போது முதல் இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறார் பாகேல். இதனால் ஆத்திரம் அடைந்த சிங் தியோ, தன் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி, ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

மாநிலம் முழுதும் கட்சி நிர்வாகிகள், இரண்டு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர்தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவரை, பாகேல் ஆதரவாளர்கள் நையப்புடைத்தனர். அடிதடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இதைப் பார்த்து கவலையடைந்துள்ள மூத்த தலைவர்கள், 'விஷயம் விபரீதமாகும் முன், மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அலறத் துவங்கியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X