டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தமிழகத்தில், பா.ம.க.,வை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்ய, கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாநில துணை பொதுச் செயலர் பதவி கைவிடப்படுகிறது. இனி, கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு, மாவட்ட செயலரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.'டவுட்' தனபாலு: எந்த பதவியை


'டவுட்' தனபாலு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தமிழகத்தில், பா.ம.க.,வை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்ய, கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாநில துணை பொதுச் செயலர் பதவி கைவிடப்படுகிறது. இனி, கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு, மாவட்ட செயலரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.

'டவுட்' தனபாலு: எந்த பதவியை மாற்றினாலும்... இங்கு இருப்பவரை, அங்கே மாற்றினாலும், பா.ம.க.,வுக்கு அரசியல் எதிர்காலம், 'டவுட்' தான். இப்போது நீங்கள் செய்துள்ள பதவி மாற்றங்கள், கட்சியினரை கட்டுக்கோப்பாக வைக்கும் முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, கட்சி வளர்ச்சிக்கு உதவாது என்பதில் யாருக்கும், 'டவுட்டே' வராது!


அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி:
ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியை, இப்போதே தொடங்க வேண்டும். இத்தேர்தலில் வென்றால் தான், மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர முடியும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற நினைப்பர். நாம் விழிப்போடு பணிபுரிய வேண்டும்.

'டவுட்' தனபாலு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., பெருவாரியாக வெற்றி பெற்றாலும், வெற்றி பெற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், மாநிலத்தில், தி.மு.க., ஆட்சி உள்ளது. நகர நிர்வாகங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சிரமம் தான். எனினும், கட்சி இருக்கிறது என்பதை காட்டுவதற்கும், உங்கள் கட்சியினரை பிற கட்சிகளுக்கு ஓடாமல் வைத்திருக்கவுமே இவ்வாறு கூறுகிறீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
'கிணற்றை காணோம்' என்ற போது சிரித்தோம். ஆனால், இன்று பல ஆயிரம் கி.மீ., மழை நீர் வடிகால் கால்வாய்களை காணவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய பகல் கொள்ளை. மனசாட்சி உள்ள, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் இருந்தால், மழை நீர் வடிகால் கால்வாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: இயற்கை சீற்றங்களின் போது தான், அரசு மற்றும் அதிகாரிகளின் சொதப்பல்கள், முறைகேடுகள் அம்பலமாகும். ஆனால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நீண்ட காலமாகவே மழை நீர் வடிகால்களை மாயமாக்கி வந்துள்ளனரோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் தான் ஆகின்றன!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X