சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இன்னும் விளக்கம் வேண்டுமா?

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இன்னும் விளக்கம் வேண்டுமா?எஸ்.சங்கர், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய பா.ஜ., அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போது, அந்த கட்சியை மக்கள் எப்படி நம்புவர்?' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் உ.பி., முதல்வருமான மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில், கம்யூ.,


இன்னும் விளக்கம் வேண்டுமா?எஸ்.சங்கர், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய பா.ஜ., அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போது, அந்த கட்சியை மக்கள் எப்படி நம்புவர்?' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் உ.பி., முதல்வருமான மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில், கம்யூ., கட்சிகள் நடத்தும் தொழிற்சங்கங்கள் தான் பிரபலமானவை; மற்ற கட்சிகள் நடத்தும் தொழிற்சங்கங்கள் பெரிய அளவில் இல்லை.சாதாரண விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி, வேலை நிறுத்தம் நடத்துவது கம்யூனிஸ்ட் காரர்களின் வாடிக்கை.தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போல, ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து, 'பாரத் பந்த்' நடத்தி உற்பத்தியை முடக்குவது, கம்யூ.,க்கு பிடித்த பொழுதுபோக்கு.அந்த வேலை நிறுத்த போராட்டம், 30 நாட்களுக்கு மேல் தொடராது; அதற்கு மேல் போராடினால் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை இழந்து, குடும்பம் நடத்த இயலாமல் தவிப்பர். அதனால், அதிகப்பட்சம் 10 நாட்கள் தான் போராட்டம் நடத்துவர்.எதிர்க்கட்சிகளின் துாண்டுதலால் தான், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடந்து வருகிறது. 'விவசாயி' என்ற பெயரில் சிலர், தலையில் பச்சை தலைப்பாகையை அணிந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆசிரியராக பணியில் இருந்த மாயாவதி, கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்திப்பார் என நினைக்கிறேன்...எந்த விவசாயியாவது, தான் பயிர் செய்யும் நிலத்தை கூட கவனிக்காமல், டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டு கோஷம் போட்டுக் கொண்டிருப்பானா?முதல் நாள் விதைத்ததில் இருந்து அறுவடை காலம் வரை, அவன் நினைப்பு நிலத்தை சுற்றியே உழன்று கொண்டிருக்கும்.டில்லியில் போராடுவோர் விவசாயிகள் அல்ல; புரோக்கர்களின் துாண்டுதலால் களமிறங்கி இருக்கும் நபர்கள்.இந்த உண்மையை உணராமல் மாயாவதியும், டில்லி போராட்டத்திற்கு வக்காலத்து வாங்குவது வருத்தத்தை தருகிறது.புதிய வேளாண் சட்டத்தை, 'வாபஸ்' வாங்கச் சொல்லி விவசாய புரோக்கர்கள் ஏன் போராட வேண்டும்?ஏனெனில் இச்சட்டத்தின் படி, புரோக்கர்கள் தலையீடு இன்றி, விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை சந்தையில் விற்கலாம். இதுகாறும் விவசாயிகளின் உழைப்பை சுரண்டிய புரோக்கர்களின் கொள்ளைக்கு, மத்திய பா.ஜ., அரசு, 'ஆப்பு' அடித்திருக்கிறது.
அதனால் தான் அந்த போராட்டம். இதற்கு மேலும், அது பற்றி விளக்க வேண்டுமா மாயாவதி அவர்களே?


தி.மு.க.,வின்இரட்டை வேடம்!வீ.மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியலில் எல்லாம் சகஜமப்பா' என்று சொல்வரே... அதை, தி.மு.க., அரசு அடிக்கடி ஊர்ஜிதப்படுத்துகிறது.தி.மு.க., ஆரம்பித்த காலத்தில் இருந்தே, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும்; ஆளுங்கட்சியாக வந்த பின் வேறொன்றும் செய்வது வழக்கம். இன்றும் தி.மு.க., மாறவேஇல்லை.அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போது காவிரி டெல்டா பகுதியில், 'பெட்ரோ கெமிக்கல்' தொழில் துவக்க கூடாது என்று, தி.மு.க., தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கொடி பிடித்தன.அதற்கு பயந்து டெல்டா பகுதியை, 'சிறப்பு வேளாண் மண்டலமாக' அ.தி.மு.க., அரசு அறிவித்தது.ஆனால் தி.மு.க., இப்போது ஆட்சிக்கு வந்ததும், கொடி பிடித்தது, கோஷம் போட்டது எல்லாம் மறந்து விட்டது போலும்.இப்போது வரி வருமானத்திற்காக, டெல்டா பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மாற்ற திட்டமிட்டு உள்ளது. தி.மு.க., இரட்டை வேடம் இப்போது பல் இளிக்கிறது!
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தி.மு.க., நடத்திய போராட்டங்கள் எல்லாம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போடப்பட்ட நாடகங்கள் தானா? இதற்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு வேறு!மக்கள் எல்லாரையும் மடையர்கள் என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனரா?ஆட்சிக்கு வருமுன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு வந்ததும் வேறு மாதிரி நடவடிக்கை என்று நடந்து கொள்ளும், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பி.டி., விதைகள்கவனம் தேவை!பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்: இந்திய வேளாண்மையில், மரபணு மாற்றப்பட்ட விதைகள் அறிமுகம் செய்யப்பட்ட போது, விவசாய அமைப்பினர், சமூக நல ஆர்வலர்கள் எதிர்த்தனர். பி.டி., என்ற மரபணு விதையின் அபாயங்களை பட்டியலிட்டு, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.அதன் காரணமாக அரசும், 'பி.டி., பருத்தியைத் தவிர வேறு எதையும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் பயிரிடப்படக் கூடாது' என, தடை விதித்தது.பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, சில இடங்களில் மட்டும் பி.டி., ரக பருத்தி பயிரிடப்படுகிறது.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த ஜூனில் ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில் மரபணு மாற்றப்பட்ட அரிசி 500 டன் இருந்ததும், இதையடுத்து அதற்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டதும், இந்திய வேளாண் சந்தைக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து நம் மத்திய அரசு, 'உலகச் சந்தையில் இந்திய அரிசியின் மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சி இது.
மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது' என தெரிவித்துள்ளது.ஆக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள், உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை, உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன.நம் நாட்டில், பி.டி., ரக பருத்தியை தவிர வேறு ஏதேனும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, வேளாண் துறையினர் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதை தடை செய்ய வேண்டும்.மேலும் சட்டத்திற்கு புறம்பாக, மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும்
நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது தான் வேளாண்மைக்கும், நம் ஏற்றுமதி
வணிகத்திற்கும் நல்லது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
13-நவ-202113:59:33 IST Report Abuse
raja "மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து" ரொம்ப சிம்பிள் எவன் எவன் சீனாவிடம் இருந்து உரம் மருந்து மென்று மட்டும் அல்லாமல் அனைத்து பொருள்களையும் இறக்குமதி செய்கிறான் என்று பார்த்தால் தெரிந்துவிடும்....,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X