பட்டுப்போன தென்னைகளுக்கு மாற்றுக்கன்றுகள் நடவு தீவிரம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

பட்டுப்போன தென்னைகளுக்கு மாற்றுக்கன்றுகள் நடவு தீவிரம்

Added : நவ 12, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி விவசாயிகள், பட்டுப்போன தென்னை மரங்களை அகற்றி விட்டு, மாற்றுக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சியில், கடந்த சில ஆண்டுகளாக தென்னை பயிருக்கு சவாலான சூழல் நிலவுகிறது. வெள்ளை ஈ தாக்கம், கேரள வேர் வாடல் நோய் ஆகியவற்றால், தென்னந்தோப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, வேர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி விவசாயிகள், பட்டுப்போன தென்னை மரங்களை அகற்றி விட்டு, மாற்றுக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சியில், கடந்த சில ஆண்டுகளாக தென்னை பயிருக்கு சவாலான சூழல் நிலவுகிறது. வெள்ளை ஈ தாக்கம், கேரள வேர் வாடல் நோய் ஆகியவற்றால், தென்னந்தோப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை, வெட்டி அகற்றி எரிக்க வேளாண் துறை பரிந்துரை செய்கிறது. இதன் வாயிலாக, வேர் வாடல் வைரஸ் நோய், மற்ற மரங்களுக்கும், பக்கத்துக்கு தோப்புகளுக்கும் பரவாமல் தடுக்க முடியும்.அப்படி, பொள்ளாச்சி பகுதியில் பூச்சி, நோய் தாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெட்டி அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு பதிலாக, புது கன்றுகளை மறுநடவு செய்ய விவசாயிகள் காத்திருந்தனர். இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்தது. தற்போது, வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்கிறது.இதனால், வரும் கோடை காலத்தில் பாசன பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், தென்னை மறுநடவில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழி எடுத்து, தென்னங்கன்றுகளை நடவு செய்து, கால்நடைகள் கடிக்காதவாறு வலை பாதுகாப்பும் செய்துள்ளனர்.பருவமழைக்கே கன்று நன்கு வேர் பிடித்து விடும். அதன் பின், முறையாக பாசனம் மற்றும் உரம் அளித்தால், செழித்து வளர்ந்து விடும், என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X