சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராட்டிய மீனவர் மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்?மராட்டிய மீனவர், இந்திய மீனவர் என குறிப்பிடப்படுகிறார். ஆனால், தமிழக கட்சிகள், கொல்லப்படும் மீனவரை, தமிழக மீனவர் எ1ன

பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராட்டிய மீனவர் மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்?மராட்டிய மீனவர், இந்திய மீனவர் என குறிப்பிடப்படுகிறார். ஆனால், தமிழக கட்சிகள், கொல்லப்படும் மீனவரை, தமிழக மீனவர் எ1ன குறிப்பிடுகின்றன. அதனால் தான், இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் போகிறதோ என்னவோ?



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
எங்கள் அரசு, குதிரை வேகத்தில் சென்றது. அடுத்து வந்துள்ள, தி.மு.க., அரசு, ஆமை, நத்தை வேகத்தில் செல்கிறது. பழையபடி, குதிரை வேகத்தில் செயல்பட்டால் தான், சென்னையை காப்பாற்ற முடியும்.பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., அரசு ஆமை போல இருந்ததால் தான், சென்னையில் மழை நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனரே, தி.மு.க.,வினர்...


தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை
: 2015 பெரு வெள்ளத்துக்கு பிறகும் சென்னையை காப்பாற்ற, அ.தி.மு.க., ஆட்சி ஏதும் செய்யவில்லை. கடந்த நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, ஆறு மாதமே ஆட்சியில் இருக்கும் ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்க அருகதை இல்லை.'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், எல்லா கோளாறுகளையும் சரி செய்து விடுவோம்' என்றாரே ஸ்டாலின்... தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆன பிறகும், இந்த சின்ன விஷயத்தை சரி செய்ய முடியலையா?


தமிழக பா.ஜ., தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை:
வெள்ள நீர் கால்வாய்களை துார் எடுப்பது, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடக்கும். ஆனால், இன்னும் கால் பங்கு கூட பணி முடியவில்லை. அதனால் தான் முதல்வரின் சொந்த கொளத்துார் தொகுதியில் படகில் சென்று, நிலைமையை மக்களுக்கு காண்பித்தேன்.அவர்கள், சொல்வதைத் தான் செய்வர்; செய்வதைத் தான் சொல்வர். அதனால் தான் வௌ்ள நீர் கால்வாய்களை துார்வாராமல் இருந்திருக்கலாம்!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தி.மு.க., குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் செய்வதால், அந்த மாநில அரசுகளின் தயவு தேவைப்படுகிறது. இதனால், தமிழர்களின் உரிமையை, தி.மு.க., அரசு விட்டுக் கொடுக்கிறது.தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, தமிழகத்தில் இருக்கிறது என்பதை, இப்படித் தானே உறுதிபடுத்த முடியும் அவர்களால்...

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சமநிலை மூர்த்தி குதிரை வேகத்துல இருந்தது ஏன் களத்துல வெற்றி பெறாம போயிருச்சு.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
13-நவ-202104:42:36 IST Report Abuse
meenakshisundaram சீமான் கருத்துக்கள் கைதட்டலை பெற உதவுகிறது -பராசக்தியின் வசனம் போல .ஆனால் அவர் மதுகடைகள் ,இன்றுள்ள நிதர்சனம் ஹிந்து ஆன்மிகம் மற்று எண்ணற்ற விஷயங்களை தெளிவு படுத்த வில்லை .மீண்டும் மீண்டும் இலங்கை தமிழரை குறி வைத்தே பேசுகிறார். இங்குள்ள இன்றைய தமிழன் பொதுவாக இட்லி .சாம்பார் .சட்னி,பொங்கல் வடை என்றே நிம்மதியாக உண்டு காலத்தை ஓட்டுவது உண்மை .பெரிய அளவில் பாதிப்புகளை என்றுமே எல்லையில் வாழும் இந்தியர்களைப்போல அனுபவித்ததே இல்லை.இயற்க்கை சீற்றம் கூட இப்போது தான் கொஞ்சம் அவனை எழுப்புகிறது.உலகமே சுருங்கி கைக்குள் அதன்விட்ட இந்த நிலையில் இன்னும் வெறும் பழைய பெருமை கதைகள் சோற்றுக்கு உதவாது.மேலும் அவரின் பேச்சில் 'இனம் ,ஜாதி ஆகியனவையே தலை தூக்கி நிற்பது மனித வாழ்வுக்கே முற்றுப்புள்ளி வைப்பது போலாகிறது .இன்று தமிழனோ இல்லை எவரோ அரேபியா முதல் அமெரிக்க வரை சென்று பிழைக்கிறார்கள் .இந்த லக்ஷிணத்தில் தமிழ் தமிழ் இரு ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு ஜீன்களை ஆராய்ச்சி செய்வது எந் பயனையும் தமிழக்கு தராது.-புதியன புகுதல் பழையன கழிதல் என்றே வாழ்வு உள்ளது .மக்கள் வெறும் பேச்சுக்களிலேயே காலத்தை கடத்த இயலாது .வெறுப்பு பேச்சுக்கள் வேலைக்காகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X