பொள்ளாச்சி: கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியே, ராமேஸ்வரம், நாகர்கோவில், துாத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும், என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி கடிதம் எழுதியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில், இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் இருந்த ரயில்களை மீண்டும் இயக்குவதற்கு நன்றி. அதே போல், கோவை, பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ள, கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, கோவை - நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களை பொள்ளாச்சி வழியே இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில்கள், பயணிகளின் வசதிக்கு மட்டுமின்றி, வர்த்தக வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும். மேலும், இந்த ரயில்கள் இயங்கினால், கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் மாவட்ட மக்களும் பெரிதும் பயனடைவர்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE