காய்ந்து அழியும் மூங்கில்கள்: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கூடலுார்: முதுமலை பகுதிகளில், முதிர்ந்த மூங்கில்கள் முற்றிலும் காய்ந்து வருவதால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் வனப்பகுதியில் வாழும் யானைகளின் உணவு தேவையின் பெரும்பகுதியை மூங்கில்கள் பூர்த்தி செய்து வருகிறது. இப்பகுதியில், 40 ஆண்டுகள் நிறைவு பெற்ற மூங்கில்களில் நவ., மாதம் பூ பூத்து, மூங்கில்

கூடலுார்: முதுமலை பகுதிகளில், முதிர்ந்த மூங்கில்கள் முற்றிலும் காய்ந்து வருவதால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் வனப்பகுதியில் வாழும் யானைகளின் உணவு தேவையின் பெரும்பகுதியை மூங்கில்கள் பூர்த்தி செய்து வருகிறது. இப்பகுதியில், 40 ஆண்டுகள் நிறைவு பெற்ற மூங்கில்களில் நவ., மாதம் பூ பூத்து, மூங்கில் அரிசியாக மாறியது. பழங்குடியின மக்கள் மூங்கில் அரிசியை சேகரித்து விற்பனை செய்தனர். தற்போது, மூங்கில்கள் காய்ந்து முற்றிலும் அழிந்து வருகின்றன.வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'வனப்பகுதிகளில் அதிகரித்துள்ள லேன்டனா, பார்த்தீனியம் போன்ற களைசெடிகளால், தாவர உண்ணிகளுக்கு, உணவு பற்றாக்குறை உள்ளது. தற்போது, மூங்கில்களும் அழிந்து வருவதால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. யானைகளின் உணவு தேவையை வனப்பகுதியில் பூர்த்தி செய்வதன் மூலம், எதிர்காலத்தில் யானை- மனித மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X