பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருந்து உற்பத்தியாளர் - மாணவர் சந்திப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
நாமக்கல்: மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறுதியாண்டு கால்நடை மருத்துவ மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வராஜு தலைமை வகித்தார். தொடர்ந்து, இந்த சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதோடு, கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறையில் முதல் இரண்டு மதிப்பெண்கள்

நாமக்கல்: மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறுதியாண்டு கால்நடை மருத்துவ மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வராஜு தலைமை வகித்தார். தொடர்ந்து, இந்த சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதோடு, கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறையில் முதல் இரண்டு மதிப்பெண்கள் மற்றும் மருந்தியல் வினாடி-வினா, 2021ல் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கால்நடை உடற்கூறியல் துறை தலைவர் பாலசுந்தரம் பங்கேற்று, மருந்து உற்பத்தியாளர்கள்- மாணவர்கள் கலந்துரையாடலில் கிடைக்கும் தகவல்களை மாணவர்கள் நல்முறையில் பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார். துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெகதீஸ்வரன், உதவி பேராசிரியர் ராஜா, கால்நடை மற்றும் கோழி மருந்து உற்பத்தியாளர்கள் பங்கேற்று தத்தம் மருந்து பொருட்களை காட்சிக்கு வைத்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X