பொது செய்தி

தமிழ்நாடு

மண் அரிப்பை தடுக்கும் புற்கள் நடவு துவக்கம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கூடலுார்: கூடலுாரில் துார் வாரபட்ட புளியம்பாறை ஆற்றின் கரையோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க, விவசாயிகள் புற்கள் நடவு செய்ய துவங்கி உள்ளனர்.கூடலுார் பகுதியில், பருவமழை காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம், விவசாய தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், ஆற்றில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.தற்போது, புளியம்பாறை ஆற்றில், இரண்டு

கூடலுார்: கூடலுாரில் துார் வாரபட்ட புளியம்பாறை ஆற்றின் கரையோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க, விவசாயிகள் புற்கள் நடவு செய்ய துவங்கி உள்ளனர்.கூடலுார் பகுதியில், பருவமழை காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம், விவசாய தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், ஆற்றில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.தற்போது, புளியம்பாறை ஆற்றில், இரண்டு கி.மீ., துாரத்துக்கு துார்வாரும் பணி நடந்துள்ளது. எனினும் மண் அரிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில், ஆற்றின் கரையோரங்களில் புற்கள் நடவு செய்ய விவசாயிகள் களம் இறங்கி உள்ளனர். விவசாயி சிவசங்கரன் கூறுகையில்,''துார்வாரபட்ட ஆற்றின் கரையில், புற்கள் நடவு செய்வதன் மூலம், மண் அரிப்பை தடுத்த முடியும். கோடையில், கால்நடைகளுக்கு ஏற்படும் உணவு தட்டுபாட்டை நீக்கவும் இந்த புற்கள் உதவும். இதனை, அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X