ஊட்டி: ஊட்டியில், மழையால் கடும் குளிர் ஏற்பட்டதால் வெம்மை ஆடைகளின் தேவை அதிகரித்து, விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடும் குளிர் நிலவுகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மெயின் பஜார் சாலையோரம், கடைகளில், 'ஸ்வெட்டர், மப்ளர், குல்லா' என, அனைத்து குளிர்கால ஆடைகளும் விற்கப்படுவதால், சுற்றுலா பயணியர் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில்,'நவ., முதல் ஜன., மாதங்கள் வரையிலான குளிர்காலத்தில் வழக்கமாக, குளிர் சீதோஷணத்துக்கு ஏற்ற 'ஸ்வெட்டர்' உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும். அதில், குல்லா அதிகளவில் விற்பனையாகிறது, 50 முதல், 100 வரை தரத்துக்கு தகுந்தாற் போல் குல்லா விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE