பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டபெட்டா சாலை பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா காட்சி முனை சாலையில், சேதமான பகுதியை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஊட்டியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை அடுத்து, மாநில அரசின் தளர்வு காரணமாக இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில், தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து காட்சி முனைக்கு செல்லும் சாலையில் மழையால் அங்குள்ள தடுப்பு

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா காட்சி முனை சாலையில், சேதமான பகுதியை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஊட்டியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை அடுத்து, மாநில அரசின் தளர்வு காரணமாக இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில், தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து காட்சி முனைக்கு செல்லும் சாலையில் மழையால் அங்குள்ள தடுப்பு சேதமானதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணியர் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் சேதமான பகுதியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதி, 20 லட்சம் ரூபாயில் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பணி துவக்கவில்லை.
நேற்று, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இச்சாலையை ஆய்வு செய்தார். பின், நிருபர்களிடம் கூறுகையில்,''சேதமான பகுதியை சீரமைக்க, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணி துவங்காமல் உள்ளது. விரைந்து பணிகளை துவக்கி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X