சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: முத்துகாப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கவுதம், 24; பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடிவந்தனர். நேற்று, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

சேந்தமங்கலம்: முத்துகாப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கவுதம், 24; பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடிவந்தனர். நேற்று, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்தனர். கவுதம் என தெரிந்தது. தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்தாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X