சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மழைக்கால மலச்சிக்கலை போக்கலாம்!

Added : நவ 12, 2021
Share
Advertisement
இந்த மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை, மலச்சிக்கல். அதற்கான தீர்வுகளை கூறுகிறார், சித்த மருத்துவர், க.மது கார்த்தீஷ்: அஜீரண கோளாறுகளுக்கு பொதுவான தீர்வு, பசித் தீயைத் துாண்டக்கூடிய மிளகு, இஞ்சி, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் உள்ளிட்டவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது தான்.சுக்கு, மிளகு, திப்பிலி என்ற திரிகடுக பொருட்களை உணவிலோ
 மழைக்கால மலச்சிக்கலை போக்கலாம்!

இந்த மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை, மலச்சிக்கல். அதற்கான தீர்வுகளை கூறுகிறார், சித்த மருத்துவர், க.மது கார்த்தீஷ்: அஜீரண கோளாறுகளுக்கு பொதுவான தீர்வு, பசித் தீயைத் துாண்டக்கூடிய மிளகு, இஞ்சி, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் உள்ளிட்டவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது தான்.சுக்கு, மிளகு, திப்பிலி என்ற திரிகடுக பொருட்களை உணவிலோ அல்லது மருத்துவரின் அறிவுரையின் படி, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளலாம். தவிர, அஜீரணக் கோளாறு இருக்கும்போது மலச்சிக்கல் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு அதிகம்.இதற்காக கடுக்காயை இரவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. 'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்' என்ற சொல்லுக்கேற்ப, கடுக்காயை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ஜீரணத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு இஞ்சியை வாயில் அடக்கிக் கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இஞ்சி தேனை வாங்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தாலும், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.இயற்கையாகவே பசியைத் துாண்டி, ஜீரணத்தை சரி செய்யும் குணம் சுக்குப் பொடிக்கு உண்டு. பெரும்பாலானோர், காய்ந்த இஞ்சியைத் தான் சுக்கு என்று நினைக்கின்றனர். ஆனால், சுக்கு என்பது இஞ்சியை நன்றாக தோல் சீவிய பின், அதை சுண்ணாம்பு தெளிநீரில் ஊற வைத்து, பின் அதை காய வைத்து கிடைப்பதாகும்.

இஞ்சி கணுக்களில் சுண்ணாம்புச் சத்து சேர்ந்து, அதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.அதேபோல், கால்சி யம், விட்டமின்கள், 'ஏ, டி' உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் சுக்கிலிருந்து நமக்கு கிடைக்கும். அதனால் தான், 'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' என்றனர்.கடுக்காயில் உள்ள துவர்ப்பு சத்தானது ஜீரண சக்தியை இலகுவாக்கும். குறிப்பாக, மலச்சிக்கல் இல்லாமல் உடலைப் பாதுகாக்கும்.

நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, உடலுக்கு வலிமை அளிப்பதில் கடுக்காய் சிறந்த மூலிகை. கடுக்காயை எந்தளவு மற்றும் எதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளுங்கள்.'தாயிற் சிறந்த கடுக்காய்' என சித்த மருத்துவத்தில் கடுக்காய் பற்றிய பாடல் ஒன்றும் உள்ளது. அதாவது, கடுக்காயானது தாயைப் போல் நம் உடலைப் பேணிக் காக்கும் என்று பொருள்.நம் உடலையும், மனதையும் வலிமையாக வைத்துக் கொள்ள ஜீரண சக்தி மிக மிக முக்கியமானது. அதனால், உணவில் அடிக்கடி பிரண்டை துவையல், நாரத்தை துவையல், மிளகு ரசம், சீரக ரசம் உள்ளிட்ட வற்றை சேர்த்துக் கொண்டால், அஜீரணக் கோளாறு நம்மை அண்டாது!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X