சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவரிடம் பணம் பறிப்பு; இரண்டு பேர் சிக்கினர்

Added : நவ 12, 2021
Share
Advertisement
நாமக்கல்: ப.வேலூரை சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ், 38. நேற்று, லாரியில் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு ஏற்றிக்கொண்டு நாமக்கல்-சேலம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். பொம்மைகுட்டைமேடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த, நான்கு பேர் கொண்ட கும்பல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன், 24 ஆயிரம்

நாமக்கல்: ப.வேலூரை சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ், 38. நேற்று, லாரியில் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு ஏற்றிக்கொண்டு நாமக்கல்-சேலம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். பொம்மைகுட்டைமேடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த, நான்கு பேர் கொண்ட கும்பல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன், 24 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் லாரியை கடத்த முயன்ற அந்த நபர்கள், லாரியை ஓட்டிச்சென்ற போது முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த, இருவர் தப்பிவிட்டனர். சிக்கிய இருவருக்கு, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். நல்லிபாளையம் போலீசார், இருவரையும் மீட்டனர். விசாரணையில் புதன்சந்தையை சேர்ந்த சூர்யா, களங்காணியை சேர்ந்த கார்த்திக் என்பது தெரிந்தது. இருவரும் படுகாயங்களுடன் இருந்ததால், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X