சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறிப்பில் ஈடுபட்ட மூவரிடம் விசாரணை

Added : நவ 12, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. தொடர்ந்து சந்தேகப்படும்படியான, மூன்று பேரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் அவர்களை தேடி வந்தனர். அவர்களை, 10 மாவட்ட போலீசார் தேடி வருவதாகவும், 23 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் நாமக்கல் மாவட்ட

நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. தொடர்ந்து சந்தேகப்படும்படியான, மூன்று பேரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் அவர்களை தேடி வந்தனர். அவர்களை, 10 மாவட்ட போலீசார் தேடி வருவதாகவும், 23 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் நாமக்கல் மாவட்ட போலீசாரிடம் சிக்கியதாக தெரிகிறது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை கைது செய்துள்ள போலீசார், திருட்டு போன, 200 பவுன் நகைகளுக்கு மேல் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X