காஷ்மீரில் 'என்கவுன்டர்' 2 பயங்கரவாதிகள் பலி

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் நடந்த 'என்கவுன்டரில்' இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பெமினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் மற்றும் ராணுவம் இணைந்து நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தின. அப்போது இருதரப்புக்கும் கடும் துப்பாக்கிச்

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் நடந்த 'என்கவுன்டரில்' இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பெமினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் மற்றும் ராணுவம் இணைந்து நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தின. அப்போது இருதரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், அமீர் ரியாஸ் மற்றும் ஷிராஸ் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி ஜம்மு - காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி., விஜயகுமார் கூறியுள்ளதாவது: சுட்டுக் கொல்லப் பட்ட இருவரும் 'முஜாஹிதீன் கஸ்வத்துல் ஹிந்த்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அமீர் ரியாஸ் அந்த இயக்கத்தின் தலைவராக செயல்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்களை நடத்திய ரியாஸ், 2019ம் ஆண்டில் 40 மத்திய ரிசர்வ் போலீசார் உயிரிழக்க காரணமான தாக்குதலின் முக்கிய குற்றவாளி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X