கொரோனாவால் 'பாடி பிட்னெஸ்' போச்சு போட்டிகளில் பங்கேற்பும் குறைஞ்சுருச்சு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளது.கோவையை சேர்ந்த பலர் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். சென்னைக்கு அடுத்து, கோவையில் தான் அதிகமாக விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். தனி நபர் விளையாட்டு முதல் குழு விளையாட்டு வரை அனைத்து விளையாட்டுகளிலும்

கோவை: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளது.கோவையை சேர்ந்த பலர் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். சென்னைக்கு அடுத்து, கோவையில் தான் அதிகமாக விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். தனி நபர் விளையாட்டு முதல் குழு விளையாட்டு வரை அனைத்து விளையாட்டுகளிலும் கோவையின் ஆதிக்கம் இருந்துள்ளது.கொரோனா நோய் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள், பயிற்சிகளுக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது தான் விளையாட்டுத்துறையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.கொரோனாவுக்கு முன், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் சுமார், 1500 முதல், 2000 பேர் வரை கலந்து கொண்டனர்.
தற்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக, பதிவு செய்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.விளையாட்டு பயிற்சியாளர்கள் கூறுகையில், 'விளையாட்டை வாழ்வாதாரமாக இருந்த பல வீரர்கள், கொரோனாவால் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.அதுதவிர, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் விளையாட்டு பயிற்சி, போட்டி உள்ளிட்டவை இல்லாமல் இருந்ததால் பலர் உடல் பருமன் அடைந்து, போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது தான் பள்ளிகள் திறந்துள்ளதால், மாணவர்களை 'பிட்' ஆக தயாரித்து அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X