பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் பாதுகாப்பானது ஆய்வு முடிவில் தகவல்

Added : நவ 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:கோவாக்சின் தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்திக் கொள்வது அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவைத் தடுக்கும் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. 'தி லான்சன்'இந்த தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார

புதுடில்லி:கோவாக்சின் தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்திக் கொள்வது அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவைத் தடுக்கும் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வருகிறது.


'தி லான்சன்'

இந்த தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வழங்கியது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால அறிக்கையை பிரபல மருத்துவ பத்திரிகையான, 'தி லான்சன்' வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த ஆண்டு நவம்பர் 16 - இந்தாண்டு மே 17 வரை, இரண்டு டோஸ் கோவாக்சின் செலுத்திய 18 வயதிற்கு மேற்பட்ட 8,421 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 24 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டடது.

அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக தடுப்பூசி 77.8 சதவீத திறனுடன் செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்ட ஏழு நாட்களில் சிலருக்கு தலைவலி, சோர்வு, காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான பாதிப்புகள் மட்டுமே இருந்தன. எனவே கோவாக்சின் தடுப்பூசி அதிக பாதுகாப்பானது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பரிசோதனை

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா கூறும்போது, ''உலகளவில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை விபரங்கள், 10 மருத்துவ இதழ்களில் வெளியாகி, இதர முன்னணி தடுப்பூசி வகைகளில் இடம் பிடித்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X