செய்தி செய்தி

தமிழ்நாடு

தென்னை வேர் வாடல் நோயை விரட்டுகிறது நுண்ணுயிர் கலவை: கண்டுபிடித்தது வேளாண் பல்கலை

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: தென்னை வேர் வாடல் நோய்க்கான 'கோகோகான்' நுண்ணுயிர் கலவையை, வேளாண் பல்கலை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.தென்னையில் ஏற்படும் வேர்வாடல் என்ற நோயால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் "பைட்டோபிளாஸ்மா' எனும் நோய் கிருமியால் ஏற்படுகிறது.தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சிகளின் மூலம் பரவுகின்றது. இந்நோய் தாக்குதல் ஏற்பட்ட தென்னைகளில்,



கோவை: தென்னை வேர் வாடல் நோய்க்கான 'கோகோகான்' நுண்ணுயிர் கலவையை, வேளாண் பல்கலை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.தென்னையில் ஏற்படும் வேர்வாடல் என்ற நோயால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் "பைட்டோபிளாஸ்மா' எனும் நோய் கிருமியால் ஏற்படுகிறது.தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சிகளின் மூலம் பரவுகின்றது. இந்நோய் தாக்குதல் ஏற்பட்ட தென்னைகளில், இலைமட்டைகள் கீழ் நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்பு போல காணப்படும்.மரத்தின் நடுப்பகுதியில் உள்ள இலைகள், மஞ்சள் நிறமாக காணப்படுவது, இலையின் ஓரங்கள் மற்றும் பூங்கொத்து கருகி காணப்படுவது, குருத்து அழுகுவது, மொட்டுகள் உதிர்ந்து விடுவது, வேர் அழுகி, நிறமின்றி காணப்படுவது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள்.கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை. வேர்வாடல் நோய் தடுப்புக்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்நிலையில் கோவை வேளாண் பல்கலையில், வேர்வாடல் நோய்க்கான நுண்ணுயிர் கலவை கண்டறியப்பட்டுள்ளது.பல்கலை துணைவேந்தர் குமார் கூறியதாவது:தென்னையின் நீடித்த தன்மைக்கு சவாலாக, வேர்வாடல் நோய் உள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான மரங்களில் நுண்ணுயிர்கள், வேர் வழியாக தண்டு, இலைப்பகுதிகளுக்கு ஊடுருவிச் செல்கிறது.விவசாயிகள் இந்நுண்ணுயிரி கலவையை, ஒருங்கிணைந்த மேலாண்மை முறையில் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். அறிகுறிகள் தென்படும் துவக்க நிலையிலேயே, மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, நுண்ணுயிர் கலவை வேளாண் பல்கலை கோகோகான் அறிமுக விழா, பொள்ளாச்சியில் நடந்தது. பல்கலை பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர், பிரபாகர், வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X