சாக்கடையில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

சாக்கடையில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு

Added : நவ 12, 2021
Share
கோவை: கோவை, உக்கடம், டவுன்ஹால், மரக்கடை ஆகியவை போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு நுாற்றுக்கணக்கான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், வைசியாள் வீதி பகுதியில் கர்ப்பிணி பசுமாடு ஒன்று சாலை ஓரம் நடந்து சென்றது.அப்போது, வாகன நெரிசல் இருந்ததால், அங்கிருந்து தப்பிக்க

கோவை: கோவை, உக்கடம், டவுன்ஹால், மரக்கடை ஆகியவை போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு நுாற்றுக்கணக்கான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், வைசியாள் வீதி பகுதியில் கர்ப்பிணி பசுமாடு ஒன்று சாலை ஓரம் நடந்து சென்றது.அப்போது, வாகன நெரிசல் இருந்ததால், அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சாக்கடை கால்வாயில் விழுந்தது. தகவலறிந்த கோவை தெற்கு தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், பசுவை பத்திரமாக மீட்டனர். சாலையில் இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X