குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்க முடிவு

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
போபால்:ஹிந்துத்வாவை பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதியுள்ள புத்தகத்துக்கு தடை விதிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.பிறவிக் குணம்காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், 'சன்ரைஸ் ஓவர் அயோத்யா; எங்கள் காலத்தில் தேசியம்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.இதில்

போபால்:ஹிந்துத்வாவை பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதியுள்ள புத்தகத்துக்கு தடை விதிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.


பிறவிக் குணம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், 'சன்ரைஸ் ஓவர் அயோத்யா; எங்கள் காலத்தில் தேசியம்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.இதில் 'காவி வானம்' என்ற தலைப்பில் 'சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவியராலும் ஏற்படுத்தப்பட்டது. 'ஆனால் அதன் புனிதத்தை ஹிந்துத்வா கொள்கைகள் சீரழித்துவிட்டன.

ஹிந்துத்வாவின் அரசியல் பதிப்பும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே தான்' என, கூறியுள்ளார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் கவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோத்தம் மிஸ்ரா. இவர் போபாலில் கூறியதாவது:

ஹிந்துத்வாவை அவமானப்படுத்தி நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் பிளவு ஏற்படுத்த சல்மான் குர்ஷித் முயற்சிக்கிறார். இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் கேவலப்படுத்துவது காங்கிரசின் பிறவிக் குணம். காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரசைச் சேர்ந்த பலர், வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் அவமானப்படுத்துவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.


ஆலோசனை

அந்த வரிசையில் சல்மான் குர்ஷித்தும் சேர்ந்துள்ளார். சல்மான் குர்ஷித் எழுதியுள்ள புத்தகத்துக்கு தடை விதிப்பது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. ஆலோசனை கிடைத்தபின், புத்தகத்துக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanathan Govindarajan - Chennai,இந்தியா
13-நவ-202114:27:29 IST Report Abuse
Devanathan Govindarajan Pl ignore thia ook. do not make any publicity
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X