பெண் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது: குளித்தலை மக்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது: குளித்தலை மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 12, 2021
Share
குளித்தலை: பெண் டாக்டருக்கு, மருத்துவ சேவையை பாராட்டி மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். இதனால் குளித்தலை அருகே கிராம மகிழ்ச்சியடைந்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் இந்திய பாதுகாப்பு துறையில், இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி.

குளித்தலை: பெண் டாக்டருக்கு, மருத்துவ சேவையை பாராட்டி மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். இதனால் குளித்தலை அருகே கிராம மகிழ்ச்சியடைந்தனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் இந்திய பாதுகாப்பு துறையில், இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களின் மகன் டாக்டர் பிரேம்குமார் மருத்துவ நிபுணராக டில்லியில் பணிபுரிகிறார். இவரது மனைவி நிரூ பிரேம்குமார், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் கூடுதல் இயக்குனராக பணிபுரிகிறார். மருத்துவத் துறையில் இவர் ஆற்றிவரும் சேவையை பாராட்டி, மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நிரூ பிரேம்குமாருக்கு வழங்கி கவுரவித்தார். இதையடுத்து குளித்தலை மற்றும் மருதூர் கிராம மக்கள், பத்மஸ்ரீ விருது பெற்ற நிரூபிரேம் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X