சத்துணவு பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து

Added : நவ 12, 2021
Share
கரூர்: சத்துணவு திட்டத்தில், பணியாளர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு, ரத்து செய்யப்படுகிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கரூர் நகராட்சியில் காலியாக இருந்த, 158 சத்துணவு அமைப்பாளர், 264 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு, 2020 செப்.,ல்

கரூர்: சத்துணவு திட்டத்தில், பணியாளர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு, ரத்து செய்யப்படுகிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கரூர் நகராட்சியில் காலியாக இருந்த, 158 சத்துணவு அமைப்பாளர், 264 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு, 2020 செப்.,ல் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மேற்படி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறித்து விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பான அறிவிப்பு, பின்னர் தனியே வெளியிடப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X