பொது செய்தி

தமிழ்நாடு

பகல் நேரத்தில் நகரத்திற்கு ரயில்கள்; ரயில்வே பயணிகள் கமிட்டிக்கு மனு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் இருந்து பகல் நேரத்தில், சென்னை உட்பட பெரு நகரத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என, ரயில்வே பயணிகள் கமிட்டியிடம் மனு அளிக்கப்பட்டது.கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் குறித்து, ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினரான பொன்பால கணபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் விசாகன் மனு அளித்தார். அதில்,

கரூர்: கரூரில் இருந்து பகல் நேரத்தில், சென்னை உட்பட பெரு நகரத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என, ரயில்வே பயணிகள் கமிட்டியிடம் மனு அளிக்கப்பட்டது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் குறித்து, ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினரான பொன்பால கணபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் விசாகன் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: கரூர் தொழில் நகரமாக இருப்பதால், சென்னை உட்பட பெரு நகரங்களுக்கு பகல் நேரங்களில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் முன், போதிய வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இங்கு, உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் முன் ஆதரவற்றோர் பலர் தங்கி இருக்கின்றனர். இவர்களால், பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இவர்களை, காப்பகத்திற்கு அனுப்பி வைக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X