பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீர் தடுப்பணைகள் நிறைந்து, பாசன குளங்களுக்கு மழை நீர் செல்வதால் ஏரிகள் நிறைந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் போதிய மழை இல்லாமல், பாசன ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 14 நாட்களாக

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீர் தடுப்பணைகள் நிறைந்து, பாசன குளங்களுக்கு மழை நீர் செல்வதால் ஏரிகள் நிறைந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் போதிய மழை இல்லாமல், பாசன ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 14 நாட்களாக தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், தடுப்பணைகள் நிறைந்து ஏரிகள் நிறைந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால், 16 ஆண்டுகளுக்கு பிறகு, 344.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடசேரி பெரிய ஏரி நிறைந்தது. மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. தமிழக கைத்தறி துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ், கரூர் கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். காவல்காரன்பட்டி அருகே, வெள்ள நீரில் நெற்பயிர்கள் மூழ்கிய பகுதிகளை ஆய்வு செய்து மழைநீர் வடிய அனைத்து ஏற்படுகளும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஏரி அருகில் உள்ள அரசு பள்ளிக்கு பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திவ்யாவிற்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து நிறைந்து வழியும் புழுதேரி ஏரி, பாதிரிபட்டி ஏரியை பார்வையிட்டனர். ஆய்வின் போது எஸ்.பி., சுந்தரவடிவேல், குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி, தோகைமலை கிழக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பஞ்., தலைவர்கள், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X