லக்கிம்பூர் வழக்கு: உ.பி., அரசுக்கு அவகாசம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வெளிமாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, உத்தர பிரதேச அரசுக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டம்உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக

புதுடில்லி:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வெளிமாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, உத்தர பிரதேச அரசுக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போராட்டம்

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக இங்குள்ள லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.அப்போது விவசாயிகள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் நான்கு பேர் இறந்தனர். இதையடுத்து வன்முறை வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது.லக்கிம்பூர் சம்பவம் பற்றி, உத்தர பிரதேச அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.


விசாரணை

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'லக்கிம்பூர் சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கண்காணிப்பது பற்றி மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறுகையில், ''சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை வேறு மாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, வரும் ௧௫ம் தேதி வரை அவகாசம் தேவை,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள் உத்தர பிரதேச அரசுக்கு ௧௫ம் தேதி வரை அவகாசம் அளித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X