பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அலுவலர் ஆய்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், மழைநீர் புகுந்துள்ள விளை நிலங்களையும், முழு கொள்ளளவு எட்டியுள்ள ஏரி, குளங்களையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஓராண்டுக்கு பெய்யும் மழையின் சராசரி அளவு, 652.2மி.மீ., தற்போது வரை, 768.87 மி.மீ., மழை

கரூர்: கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், மழைநீர் புகுந்துள்ள விளை நிலங்களையும், முழு கொள்ளளவு எட்டியுள்ள ஏரி, குளங்களையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஓராண்டுக்கு பெய்யும் மழையின் சராசரி அளவு, 652.2மி.மீ., தற்போது வரை, 768.87 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சராசரியை விட, 116.67 மி.மீ., கூடுதலாகும். இதனால், பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. வடசேரி குளம், புழுதேரி குளம், பாதிரிப்பட்டி குளங்கள், 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. தற்காப்பு நடவடிக்கைக்காக, 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினர், 73 பேர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X