பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: நவ.,20க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கரூர்: திருக்குறள்களை ஒப்புவித்தல் திறனாய்வு போட்டிக்கு வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில், 70

கரூர்: திருக்குறள்களை ஒப்புவித்தல் திறனாய்வு போட்டிக்கு வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில், 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும், 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான திறனாய்வு போட்டி கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள், 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகார எண், பெயர், குறள் எண், போன்றவற்றை தெரிவித்து, அதற்கான குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். எனவே, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 20க்குள் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அனுப்பலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X