சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலாளியை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு

Added : நவ 12, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி பஞ்., ஊத்துபட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, 50. இவர் கேரளாவை சேர்ந்தவருக்கு சொந்தமான தைல மரக்காட்டில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த, 8ல் காலை அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான மாடுகள், தைல மரக்காட்டினுள் நுழைந்து மரக்கன்றுகளை சேதப்படுத்தியது. இதுகுறித்து பழனிசாமியிடம் வெள்ளைசாமி கேட்டார். அப்போது

குளித்தலை: குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி பஞ்., ஊத்துபட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, 50. இவர் கேரளாவை சேர்ந்தவருக்கு சொந்தமான தைல மரக்காட்டில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த, 8ல் காலை அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான மாடுகள், தைல மரக்காட்டினுள் நுழைந்து மரக்கன்றுகளை சேதப்படுத்தியது. இதுகுறித்து பழனிசாமியிடம் வெள்ளைசாமி கேட்டார். அப்போது பழனிசாமி மற்றும் ஆறு பேர் சேர்ந்து வெள்ளைசாமியை அடித்துள்ளனர். அதை தட்டி கேட்ட வெள்ளைசாமியின் உறவினர்கள் சக்திவேல், அவரது மனைவி சாந்தியையும் தாக்கி காயப்படுத்தினர். சக்திவேல், சாந்தி மணப்பாறை தனியார் மருத்துவமனையிலும், வெள்ளைசாமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளைசாமி கொடுத்த புகார்படி, பழனிசாமி உட்பட ஆறு பேர் மீது, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X