மழையில் பாதுகாப்பான பைக் பயணம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
வறண்ட சாலைகளை விடவும் ஈரமான சாலைகளில், வாகனங்களை ஓட்டுவது சவாலான விஷயம். சாலையெங்கும் வெள்ளமாக காட்சியளிக்கும் இந்த பருவ மழைக்காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம்.மழைக்காலத்தில் வழுக்கும் சாலைகள், பார்க்கும் திறன் குறைவு என பல விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில், வாகனங்களின் அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுவது முக்கியம்.உங்கள் பைக் பயணம்



வறண்ட சாலைகளை விடவும் ஈரமான சாலைகளில், வாகனங்களை ஓட்டுவது சவாலான விஷயம். சாலையெங்கும் வெள்ளமாக காட்சியளிக்கும் இந்த பருவ மழைக்காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம்.மழைக்காலத்தில் வழுக்கும் சாலைகள், பார்க்கும் திறன் குறைவு என பல விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில், வாகனங்களின் அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுவது முக்கியம்.உங்கள் பைக் பயணம் பாதுகாப்பாக இருப்பதற்கான டிப்ஸ் இதோ!வேகம் வேண்டாமே!ஈரமான சலைகளில், பைக் மீதான உங்கள் கட்டுப்பாடு குறைவாகவே இருக்கும். ஆகவே, மழைக்காலங்களில் மிதமான வேகத்தில் வண்டி ஓட்டினால், பிரச்னை ஏற்பட்டாலும் சமாளிக்கலாம். கனமழையுடன், பனி மூட்டமாக இருந்தால் மேலும் வேகத்தை குறைப்பது நல்லது.சடன் 'பிரேக்' போடாதீங்க!மழைக்காலங்களில் 'சடன் பிரேக்' போடும் போது, வண்டி சறுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், முன் பிரேக்குகளை மட்டும் பயன்படுத்துவதும் ஆபத்தானது. எப்போதும், இரண்டு பிரேக்குகளையும் மெதுவாக பயன்படுத்துவது பாதுகாப்பானது.போதிய இடைவெளி வேண்டும்உங்கள் பைக் மற்றும் சுற்றியுள்ள வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியுடன் ஓட்டுங்கள். ஈரமான சாலைகளில் பைக்கை உடனே நிறுத்த முடியாமல் போகலாம். பெரிய வாகனங்களை பின்தொடரும் போது, பள்ளங்கள் தெரியாமல் போகக்கூடும். வாகனங்களின் பின் சக்கரங்களில் தெறிக்கும் நீரால், சாலையை சரியாக பார்க்க முடியாமல் போகலாம்.ஹெட்லைட்ஸ் 'ஆன்'அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் மழைக்காலத்தில் பார்வை திறனில் பிரச்னை இருக்கும். ஆகவே, பகலிலும், ஹெட்லைட்டுகளை ஆன் செய்தபடியே வண்டியை இயக்கவும். தேவையெனில், இரு இண்டிகேட்டர்களையும் ஒளிர விடலாம். மழையில் சேறு படிவதற்கு வாய்ப்பிருப்பதால், லைட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.பயணத்திற்கு முன் பரிசோதனைசாலையுடனான உங்கள் 'கிரிப்பை' உறுதிசெய்பவை டயர்கள். டயர்கள் தேயாமலும், காற்று சரியான அளவிலும் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.டிஸ்க் பிரேக், பிரன்ட் பிரேக் இரண்டும் சரியாக வேலை செய்கிறதா என பரிசோதித்துக்கொள்ளவும். ஈரப்பதத்தால், ஏர் பில்டரில் அடைப்பு ஏற்படலாம். அடிக்கடி, ஏர் பில்டர் மற்றும் செயினை சுத்தம் செய்து கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X