பொது செய்தி

இந்தியா

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'கிழிந்த மற்றும் நைந்து போன ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:-கிழிந்த மற்றும் நைந்து போன நிலையில் மாற்றவே முடியாத நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாநில தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் மட்டுமே மாற்ற முடியும். இதனால், மற்ற நகரங்கள் மற்றும்

புதுடில்லி:'கிழிந்த மற்றும் நைந்து போன ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:-கிழிந்த மற்றும் நைந்து போன நிலையில் மாற்றவே முடியாத நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாநில தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் மட்டுமே மாற்ற முடியும். இதனால், மற்ற நகரங்கள் மற்றும் கிராம மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். இதனால் நாடு முழுதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் பயன்படுத்த முடியாமல் இருப்பது ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ஏப்ரலில் அறிவிக்கப் பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை, மற்ற வங்கிகள் செயல்படுத்தவில்லை. இதனால் பொதுமக்களின் அவதி தொடர்ந்தது.

இந்நிலையில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், சில்லரை நாணயங்களும் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-202121:57:29 IST Report Abuse
அப்புசாமி இவிங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு... நல்லா இருக்kuRa 10 ரூவா காசையே வாங்க மாட்டேங்குறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X