தமிழ்நாடு

கோவையின் தொலைநோக்கு தேவை! அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும்... தொழில்துறை, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Added : நவ 12, 2021
Share
Advertisement
-நமது நிருபர்-கோவை, அவிநாசி ரோட்டில் 10 கி.மீ., துாரத்துக்குக் கட்டப்பட்டு வரும் புதுப்பாலத்தை, 2 கி.மீ., நீட்டித்து சின்னியம்பாளையத்தில் முடியுமாறு மாற்றியமைக்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்திலேயே மிக நீளமான பாலமாக, கோவை அவிநாசி ரோட்டில் 10 கி.மீ., துாரத்துக்கு ரூ.1,621 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம்

-நமது நிருபர்-கோவை, அவிநாசி ரோட்டில் 10 கி.மீ., துாரத்துக்குக் கட்டப்பட்டு வரும் புதுப்பாலத்தை, 2 கி.மீ., நீட்டித்து சின்னியம்பாளையத்தில் முடியுமாறு மாற்றியமைக்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்திலேயே மிக நீளமான பாலமாக, கோவை அவிநாசி ரோட்டில் 10 கி.மீ., துாரத்துக்கு ரூ.1,621 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த பாலம், கோவையில் அக்கட்சி வெற்றி பெறுவதற்கும் மிக முக்கியமான காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.ஸ்மார்ட் சிட்டியில் நடந்து வரும் குளம் மேம்பாட்டுப் பணிகளை விட, கோவை நகருக்குள் கட்டப்படும் புதிய பாலங்கள்தான், அ.தி.மு.க., ஆட்சிக்கு கோவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தன.காந்திபுரம் பாலம் போல் வேண்டாம்ஆனால் அதே அ.தி.மு.க., ஆட்சியில், காந்திபுரம் பாலம் எதற்கும் உதவாமல் கட்டப்பட்டதுபோல, இந்த பாலமும் கட்டப்பட்டுவிடக்கூடாது என்றுதான், பல்வேறு மாற்றங்களையும் கோவையிலுள்ள தொழில் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.ஏனெனில், அதற்கும் முந்தைய தி.மு.க., ஆட்சியில் காந்திபுரம் பாலம் வேறு விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது; அ.தி.மு.க., ஆட்சியில் சிலருக்காக அது மாற்றப்பட்டதால் ஏறுதளம், இறங்குதளமின்றி வாகனப் போக்குவரத்தே மிகக் குறைவாகவுள்ளது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தபாடில்லை.கண்டுகொள்ளாத அ.தி.மு.க., அரசுநுாறடி ரோடு பாலமும், மிக உயரமாகவும், மிகக்குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. இதேபோல, பெரும் பொருட்செலவில் கட்டப்படும் அவிநாசி ரோடு மேம்பாலமும் அமைந்து விடக்கூடாது என்று, கோவை தொழில் அமைப்புகள் பல்வேறு மாற்றங்களையும், முந்தைய அரசிடம் பரிந்துரைத்தன. ஆனால் தொழில் அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவே இல்லை.குறிப்பாக, பாலத்தை சின்னியம்பாளையம் வரை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அ.தி.மு.க., அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதன் காரணமாக, தற்போதுள்ள தி.மு.க., அரசிடம் இதே கோரிக்கையை கோவை தொழில் அமைப்பினர் முன் வைத்துள்ளனர். இதற்காக முதல்வரை மீண்டும் சந்தித்து, மறுபடியும் இதை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


மீண்டும் நெரிசல் நிச்சயம்

தற்போது கே.எம்.சி.எச்., அருகில், பாலம் முடியும் வரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டியே, கோல்டுவின்ஸ், தொட்டிபாளையம் பிரிவு, மயிலம்பட்டி என பல்வேறு கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கான ரோடுகள் பிரிவதால், பாலம் முடியுமிடத்தில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் பாலம் கட்டியும் எந்த பயனுமில்லை என்ற நிலை உருவாகும்.சின்னியம்பாளையம் வரையிலுமாக, இன்னும் இரண்டு கி.மீ., துாரத்துக்கு பாலத்தை நீட்டித்தால், கோவை நகரிலிருந்தும், விமான நிலையத்திலிருந்தும் வரும் வாகனங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி, வேகமாக நகரை கடந்து சென்று விட முடியும். இல்லாவிடில் பாலத்தைக் கடந்தாலும், இந்தப் பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடும்.கோல்டுவின்ஸ் பகுதியிலிருந்து சின்னியம்பாளையம் வரையிலான பகுதிகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. பாலம் கட்டினால் அதையும் தடுக்க முடியும்.இவை எல்லாவற்றையும்விட, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி முடிவடையும்போது, அதன் நுழைவாயில் மாற்றப்பட்டு, அதற்கான இணைப்புச் சாலை சின்னியம்பாளையம் அருகில் அமையவுள்ளது.அதனால், பாலத்தை சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பது பல விதங்களிலும் பலனளிக்கும் தொலை நோக்கு திட்டமாகவே இருக்கும். இதற்கு அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் வரை நிதி கூடுதலாக தேவைப்படும். ஆனால் கால் நுாற்றாண்டுக்கு இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பேயில்லை.கோவையின் மீது தனிக்கவனம் செலுத்தும் முதல்வர் இதையும் கண்டிப்பாக ஏற்கவே வாய்ப்பு அதிகம்!


அடுத்த அவசியமான கோரிக்கை!

கோவை தொழில் அமைப்பினர், முதல்வரைச் சந்திக்கும்போது, முதல் முன்னுரிமையாக அவிநாசி ரோடு புதிய பாலத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக, லாலி ரோடு சந்திப்பில் பாலம் அமைக்க வலியுறுத்த உள்ளனர். அதிலும் வேளாண் பல்கலையின் எதிர்புறமும், கவுலி பிரவுன் ரோட்டின் இடது புறமும் அரசு நிலங்களை எடுத்து அகலமான பாலமாக அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X