தமிழ்நாடு

'எக்ஸ்பிரஸ்' கட்டணம்... 'பாசஞ்சர்' வேகம்! ரயில் பயணிகள் அதிருப்தி

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: கோவை-மதுரை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டும், பயண நேரம் குறையாதது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.போத்தனுார் - பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., அகல ரயில் பாதையில், 17 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளது.அதன்படி, கோவை-பழநி-மதுரை இடையேயான பயணிகள் ரயில், தற்போது எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக நேற்று முன்தினம்



கோவை: கோவை-மதுரை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டும், பயண நேரம் குறையாதது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.போத்தனுார் - பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., அகல ரயில் பாதையில், 17 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளது.அதன்படி, கோவை-பழநி-மதுரை இடையேயான பயணிகள் ரயில், தற்போது எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து தினமும் மதியம், 2:10 மணிக்கு புறப்படும் ரயில்(06463) மாலை, 4:40க்கு பழநியும், தொடர்ந்து, பழநியில் இருந்து மாலை, 4:45க்கு புறப்பட்டு(06479) இரவு, 7:40க்கு மதுரையை அடைகிறது. இதற்கு, கோவையில் இருந்து போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சிக்கு, 30 ரூபாய்.கோமங்கலம், 40, உடுமலை, 45, பழநி, 55, ஒட்டன்சத்திரம், 60, திண்டுக்கல், 70, கொடை ரோடு, 75, வாடிப்பட்டி, 80, மதுரை, 90 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பயணிகள் ரயிலாக, குறைந்த பட்ச கட்டணம், 10 ரூபாயும், கோவை-மதுரை இடையேயான பயண நேரம் ஐந்தரை மணி நேரமாகவும் இருந்தது.தற்போது எக்ஸ்பிரசாக, குறைந்த பட்ச கட்டணம், 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பயண நேரம் அதே ஐந்தரை மணி நேரமாக இருப்பது, பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ரயில்வே பயணிகள் கூறியதாவது:'மீட்டர் கேஜ்' ரயில் பாதையாக இருந்தபோதுகூட, கோவை-மதுரை இடையே நான்கரை மணி நேரத்தில் ரயில் இயக்கப்பட்டது. தற்போது, அகல ரயில் பாதையாக இருந்தும், ஐந்தரை மணி நேரமாகிறது. பயணிகள் ரயிலுக்கும், எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும், பயண நேரம் மாறுபாடு காரணமாக, கட்டணம் வித்தியாசம் இருக்கும்.ஆனால், இங்கு ஒரே பயண நேரம் என்றால் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் எதற்கு. போத்தனுார்-பொள்ளாச்சி வழித்தடத்தில் அதிகபட்ச வேகம், 110 கி.மீ., வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலாக இயக்கப்பட்ட, 70 கி.மீ., வேகத்தில்தான் தற்போதும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.பஸ்களில், கோவையில் இருந்து மதுரைக்கு, 170 ரூபாய் என்பதால், ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு ஏற்ப, கோவை-மதுரை இடையே பயண நேரத்தை குறைத்து இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X