கோவை: மாவட்ட ஊரக பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற, 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக, மாவட்ட எஸ்.பி.,செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர், போலீசார் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.ஊரக பகுதிகளில் மீட்பு பணியில் 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவையான விளக்குகள், ஒளிரும் சட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.இதனை, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி வன்னிய பெருமாள் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின் போது, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி மற்றும் எஸ்.பி., செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மழை பாதிப்பா... போன் பண்ணுங்க!எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில், ''மீட்பு படையினர் மழை சேதம் ஏற்படும் இடங்களுக்கு அருகில் தங்க வைக்கப்படுவர். ஆறு, குளம், ஏரிகளில் மக்கள் குளிப்பதை தடுக்க வேண்டும். மழை பாதிப்பிற்கு 94981 81212, 94981 01165 எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஊரக பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற, 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE