செய்தி செய்தி

தமிழ்நாடு

குரங்குக்கு உணவு கொடுக்காதீங்க! சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

Added : நவ 12, 2021
Share
Advertisement
வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், யானை, மான், வரையாடு, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.பொள்ளாச்சி - ஆழியாறு வழியாக வால்பாறை வரும் வழித்தடத்தில், கொண்டை ஊசி வளைவுகளில், குரங்குகள் அதிக அளவில் உள்ளன. வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளில் சிலர், குரங்குகளுக்கு உணவு வழங்குவதால், அதை உணவை எதிர்நோக்கி சாலையோரம் காத்திருக்கின்றன.அவை

வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், யானை, மான், வரையாடு, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.பொள்ளாச்சி - ஆழியாறு வழியாக வால்பாறை வரும் வழித்தடத்தில், கொண்டை ஊசி வளைவுகளில், குரங்குகள் அதிக அளவில் உள்ளன. வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளில் சிலர், குரங்குகளுக்கு உணவு வழங்குவதால், அதை உணவை எதிர்நோக்கி சாலையோரம் காத்திருக்கின்றன.அவை ரோட்டில் துள்ளிக்குதித்து விளையாடும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களால், குரங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்கள் உணவருந்திய பிளாஸ்டிக் கவர்களை சாலையோரம் வீசி செல்வதால், இதை உட்கொள்ளும் குரங்குகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குரங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியில் தேவையான அளவு கிடைக்கிறது. வாகனங்களில் செல்வோர் உணவு வழங்குவதால், குரங்குகளுக்கு இயற்கையாக உணவு தேடும் பழக்கம் மாறிவிடுகிறது.எனவே, மனிதர்கள் உண்ணும் உணவுகளை, குரங்குகளுக்கு வழங்க கூடாது. மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X