கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கலைமகள் சபா நிறுவனத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி உத்தரவு

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை:மோசடி புகாரில் சிக்கிய, 'கலைமகள் சபா' நிறுவனத்தை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி, வணிக வரித்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கலைமகள் சபா நிறுவனம், 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் 'டிபாசிட்' பெற்று, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி, கேரள மாநிலங்களில் அசையா சொத்துக்களை வாங்கி, 'ரியல் எஸ்டேட்'

சென்னை:மோசடி புகாரில் சிக்கிய, 'கலைமகள் சபா' நிறுவனத்தை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி, வணிக வரித்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா நிறுவனம், 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் 'டிபாசிட்' பெற்று, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி, கேரள மாநிலங்களில் அசையா சொத்துக்களை வாங்கி, 'ரியல் எஸ்டேட்' வர்த்தகத்தில் இறங்கியது.


பரிசீலனை

தொடர் முறைகேடு, தவறான நிதி நிர்வாகத்தால், கலைமகள் சபா நிறுவனம் பிரச்னையில் சிக்கியது; நிறுவனத்துக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்தன; உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சொத்துக்களை பொறுப்பில் எடுத்து, அவற்றை விற்று வரும் தொகையை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அதிகாரியை 'ரிசீவர்'களாக நியமித்து, 1999ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, சிறப்பு அதிகாரி ஒத்துழைக்கவில்லை என நீதிமன்றத்துக்கு புகார் வந்தது. இதற்கிடையில், ரிசீவர்களை நீக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் குமரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, குமரேசனின் விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் பரிசீலிக்கும்படி, 2007ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஒருவர் மட்டுமே ரிசீவராக உள்ளார்.இந்நிலையில், கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கோவை சக்தி தாக்கல் செய்த மனுவில், 'உறுப்பினர்களின் முதலீடு அடிப்படையில், கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை ஒதுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

அவருடன், முதலீட்டாளர்கள் சிலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், வழக்கறிஞர்கள் வி.எஸ்.ஜெகதீசன், செல்வ திருமுருகன், ஆர்.சுரேஷ்குமார்; அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகினர்.


ஒப்படைப்பு

மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, 22 ஆண்டுகள் ஆகியும் உரிய பணம் கிடைக்கவில்லை. 5.33 லட்சம் உறுப்பினர்களின் பிரச்னைக்கு, நடைமுறை தீர்வு காணப்பட வேண்டும். எனவே, கலைமகள் சபா நிர்வாகத்தை, சட்டப்படியான அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

மூன்று வாரங்களுக்குள் கலைமகள் சபா நிர்வாகத்தை கையில் எடுக்க, பதிவுத்துறை உதவி ஐ.ஜி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை, சிறப்பு அதிகாரியாக வணிக வரித்துறை செயலர் நியமிக்க வேண்டும்.தணிக்கைதற்போது, ஒரே ரிசீவராக உள்ள ஹரிஹரன், அனைத்து ஆவணங்கள், கணக்கு வழக்குகளை, சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அசையா சொத்துக்களை கையாளவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவும், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் இதர அரசு துறை அதிகாரிகளின் உதவியை, சிறப்பு அதிகாரி பெற்றுக் கொள்ளலாம்.

ஆடிட்டரிடம் இருந்து தணிக்கை அறிக்கை பெற்று, கணக்கு விபரங்களை சிறப்பு அதிகாரியிடம் ரிசீவர் ஒப்படைக்க வேண்டும். அதை சரிபார்க்க, சிறப்பு அதிகாரி தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகள் தெரிய வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X