செய்தி செய்தி

தமிழ்நாடு

மேம்பாலங்களில் ஓடுதளம் 'ஓட்டை': பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியத்தால் அபாயம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாகன போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ரயில்வே பாலங்கள், பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியத்தால், மோசமாக சிதைந்து, வாகனங்களை கவிழ்க்கும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன.பொள்ளாச்சியில், வால்பாறை நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி - திண்டுக்கல் ரயில் பாதையை கடக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டி பத்தாண்டுகள் கடந்தும்,


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாகன போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ரயில்வே பாலங்கள், பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியத்தால், மோசமாக சிதைந்து, வாகனங்களை கவிழ்க்கும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன.பொள்ளாச்சியில், வால்பாறை நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி - திண்டுக்கல் ரயில் பாதையை கடக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டி பத்தாண்டுகள் கடந்தும், சர்வீஸ் ரோடு அமைக்காமலும், தரையடியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் மழைநீர் தேங்குவதற்கு தீர்வு காணாமலும் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.குறைந்தபட்சம், வாகன போக்குவரத்து மிக்க மேம்பால ஓடுதளத்தையாவது முறையாக பராமரிக்கலாம். அதையும் செய்யாமல், ஓடுதளம் சிதைந்து பள்ளம் ஏற்பட்டு, விபத்துக்கு வழிவகுக்கிறது.அதற்கடுத்தது, மீன்கரை ரோடு சீனிவாசபுரத்தில், பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதையை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ளது தரையடி பாலம். இப்பாலத்தின் கான்கிரீட் ஓடுதளம், பாலம் பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்களில் சிதைய துவங்கியது.இப்போது வரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. கான்கிரீட் பெயர்ந்து, கட்டுக்கம்பிகள் நீட்டிக் கொண்டு, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தி வருகிறது.இதுபற்றி தொடர் புகார் எழுந்ததால், ஓடுதளத்தில் நீட்டிக்கொண்டிருந்த கம்பிகளை துண்டித்து, ஜல்லிக்கலவை கொட்டப்பட்டுள்ளது. தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஓடுதளம் முழுக்க பரவியுள்ளது. கம்பிகள் நீட்டிக்கொண்டும், வடிகால்கள் அடைத்து தண்ணீர் தேங்கியும் நிற்கிறது.இப்படி, பொதுமக்களின் பாதுகாப்பில் அக்கறையின்றி, பாலங்கள் பராமரிப்பில் நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டுவது, அனைத்து தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X