செய்தி செய்தி

தமிழ்நாடு

துள்ளி குதிக்குது! மீன்வளர்ச்சி கழக பண்ணையில் குஞ்சுகள் விற்பனை... பருவமழையால் நிரம்பிய குளங்களில் வளர்க்க ஆர்வம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை, திருமூர்த்தி அணை மீன் வளர்ச்சிக்கழக மீன் பண்ணையில், 3 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு உள்ளது. பருவ மழையால், குளம், குட்டைகளில் வளர்க்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், மீன் குஞ்சு விற்பனை அதிகரித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், கட்லா, மிர்கால், ரோகு, திலேபியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அணையில்

உடுமலை: உடுமலை, திருமூர்த்தி அணை மீன் வளர்ச்சிக்கழக மீன் பண்ணையில், 3 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு உள்ளது. பருவ மழையால், குளம், குட்டைகளில் வளர்க்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், மீன் குஞ்சு விற்பனை அதிகரித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், கட்லா, மிர்கால், ரோகு, திலேபியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அணையில் இருப்பு செய்யப்படுகிறது. அணையில் விடப்படும் மீன்கள் வளர்ந்ததும், மீனவர்களால் வலை விரித்து பிடித்து, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.திருமூர்த்தி அணை மீன் வளர்ச்சிக்கழக பண்ணையில், மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக, 45 மீன் வளர்ப்பு தொட்டிகள் உள்ளன. தொட்டிகளில் நீர் நிரப்பி, மாட்டுச்சாணம் கரைத்து விடப்படுகிறது.இவ்வாறு செய்த, ஐந்து நாட்களில், தொட்டிகளில் மீன் குஞ்சுகளுக்கு உணவாகும், நுண்ணுயிரினங்கள் உற்பத்தியாகிறது.அதற்கு பின், பவானிசாகர், மேட்டூர், மணிமுத்தாறு அணைகளிலுள்ள, தாய் மீன் பண்ணைகளிலிருந்து, நுண் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள தொட்டிகளில் விடப்படுகிறது.காகம் உள்ளிட்டவை மீன் குஞ்சுகளை கொத்திச்செல்வதை தடுக்கும் வகையில், தொட்டிகளுக்கு மேல் வலைகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. தினமும், மீன் குஞ்சுகளுக்கு, கடலை புண்ணாக்கு, தவுடு உள்ளிட்டவை உணவாக வழங்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. தொட்டிகளில் பாதுகாப்பாக, 45 முதல் 60 நாட்கள் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள், பிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை மற்றும் அணையில் இருப்பு செய்யப்படுகிறது.தற்போது இப்பண்ணையில், 1.30 லட்சம் ரோகு இன மீன் குஞ்சுகளும், 1.15 லட்சம் மிர்கால் மீன் குஞ்சுகளும், 60 ஆயிரம் கட்லா மீன் குஞ்சுகளும் இருப்புள்ளது. இங்கு வளர்ந்த மீன் குஞ்சுகள், அமராவதி அணைக்கு இருப்பு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களுக்கு, 2 லட்சத்து, 2 ஆயிரம் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில், இருப்பு செய்ய, 54 ஆயிரத்து, 700 மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.குளங்களிலும் வளர்ப்பு வழக்கமாக அணைகளில் அமைந்துள்ள மீன் பண்ணைகளில், அணைகளுக்கும் மட்டும் இருப்பு செய்ய மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன.தற்போது பொதுமக்களும் பயன்பெறும் வகையில், திருமூர்த்தி அணை மீன் பண்ணையில், பல்வேறு ரக மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.தற்போது பருவ மழைகள் அதிகளவு பெய்து, கிராமங்களிலுள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. அவற்றில் மீன் வளர்க்க உள்ளாட்சி அமைப்புகளும், கிராம மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், மீன் குஞ்சுகள் வாங்க, தினமும் பலர் திருமூர்த்தி மீன் பண்ணைக்கு வந்து, மீன் குஞ்சுகளை விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு, அணைகளுக்கு மட்டுமின்றி, குளம், குட்டைகள் மற்றும் கிணறுகளில் வளர்க்க, ஏறத்தாழ, 3.20 லட்சம் மீன் குஞ்சுகள் கடந்த சில வாரங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


2 ரூபாய்க்கு மீன்குஞ்சு

மீன் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் கூறுகையில்,'திருமூர்த்தி அணை மீன் பண்ணையில், அணைகள் மற்றும் குளம், குட்டைகளில் மீன் வளர்க்க பொதுமக்களுக்கும் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது. 45 முதல், 60 நாட்கள் நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகள், ஒன்று, 2 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருப்பு செய்வது மட்டுமின்றி, விவசாயிகள், பொதுமக்கள் அதிகளவு வந்து வாங்கி செல்கின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X